

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள். மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன.
அந்த வகையில் இன்று (பிப்ரவரி 01) சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1899.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ. 868.50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருவது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி,01,2026- ரூ.110 அதிகரிப்பு... இன்று (பிப்ரவரி 01) முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை, ரூ.50 அதிகரித்து , ஒரு சிலிண்டர் ரூ.1,899.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.