‘நா ரெடி தான் வரவா’ பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக புகார்!

 ‘நா ரெடி தான் வரவா’ பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக புகார்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

லியோ திரைப்படத்தின் ‘நா ரெடி தான் வரவா’ பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக பலரும் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கின்ற லியோ திரைப்படத்தின் பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்க வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்துள்ளார். மேலும் இன்று 10 மணி அளவில் நீதிமன்றம் மூலமாக மனு அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை ஆதரிக்கும் வகையில் பாடலை தயார் செய்த நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆன்லைன் மூலமாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இப்படி ஒரு பாடல் தற்போது வைரலாகி போதைப்பொருள் பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர் மத்தியில் தூண்டுதலாக அமைந்திருப்பதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com