ஜோ பைடனுக்கு கொரோனா… மீண்டும் மீண்டுமா?

Joe Biden
Joe Biden
Published on

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனோ உறுதியானதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால், பிரச்சாரமும், தேர்தல் பணிகளும் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்படி தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக சங்கடங்கள் வருகின்றன.

சமீபத்தில்தான் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஒரு சங்கடம் ஏற்பட்டது. அதாவது கடந்த 14ம் தேதி பென் சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தார். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ட்ரம்பின் காதை உரசி தோட்டா சென்றது. இதனால், நூழிலையில் அவர் உயிர் தப்பினார்.

அதேபோல் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார். அதிபர் தேர்தலில் பைடன் செயல்பாடுகள் குறித்து சொந்தக்கட்சியினரே விமர்சனம் செய்கின்றனர். இப்படியான சூழலில்தான், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. லேசான சுவாச பிரச்னை, சளித்தொல்லையால் அவர் சிரமப்பட்டார். இதனையடுத்து நேற்று லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. வெள்ளை மாளிகை இதுகுறித்து குறிப்பிட்டதாவது, ஜோ பைடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, அதிபருக்கான வழக்கமான பணிகளை கவனிப்பார் என்று கூறியுள்ளது.

மேலும் ஜோ பைடனும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது தான் நலமாக இருப்பதாகவும், அமெரிக்க மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வதாகவும் பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
ட்ரம்பை சுட்டது ஈரான் - அமெரிக்க தூதரகம்!
Joe Biden

எப்போதும் தேர்தல் அன்றுதான் பல பிரச்சனைகளும் இடையூறுகளும் வரும். ஆனால், இப்போது தேர்தலுக்கு முன்பாகவே பல இடையூறுகள் வருகின்றன. அதுவும் இரண்டு முக்கிய நபர்களுக்கு அடுத்தடுத்து சங்கடமான சூழல் ஏற்பட்டிருப்பது உலகத்தின் கவனத்தை திசை திருப்பியுள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்று யார் அடுத்த அதிபர் ஆவார், என்ற கேள்வியைவிட அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வியே உலக மக்கள் மனதில் எழுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com