உருமாறும் கொரோனா வைரஸ் - பயப்பட வேண்டாம்... பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என்று மத்திய அரசும், மாநில அரசும் தெரிவித்துள்ளது.
கொரோனா
கொரோனா
Published on

உலக அளவில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கொரோனா தொற்றுநோயை உருவாக்கும் சார்ஸ்-கோவி-2 வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் மீண்டும் கொரோனா நோயை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தற்போது, உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து எக்ஸ்.இ.சி. மற்றும் ஜே.என்.-1 எனப்படும் புதிய உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகளவில் பல நாடுகளில் பரவி வருகிறது. இது ஜெர்மனியில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் பரவி ஆசிய நாடுகளில் தற்போது பரவி வருகிறது.

இந்த புதிய கொரோனா தாக்கத்தால் ஒருவர் பாதிக்கப்படும்போது பொதுவான அறிகுறிகளாக சளி, தலைவலி, இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவை காணப்படும்.

இந்த எக்ஸ்.இ.சி. மற்றும் ஜே.என்.-1 உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கடந்த கால கொரோனா போலவே மேல் சுவாசக்குழாயை பாதிக்கின்றது.

இதையும் படியுங்கள்:
கொரோனா - ஒரு சுவாரஸ்யமான ஃபிளாஷ் பேக்!
கொரோனா

‘ஆர்க்டரஸ்’ என்று குறிப்பிடப்படும் தற்போதைய கொரோனா தொற்று கடந்த ஏப்ரல் 2024 முதல் 37 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதனை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இதனால் 2020-ல் வந்தது போல் மீண்டும் கொரோனா வந்து விடுமோ என்ற அச்சம் இந்திய மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வைரஸ் தொற்று போலவே கொரோனா வைரசும் ஒன்று. கொரோனா தொற்று ஏற்படும் போது யார் பாதிக்கப்படுகிறார்கள்? மரணங்கள் ஏற்படுகிறதா? எந்த பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை பொருத்தே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என்று மத்திய அரசும், மாநில அரசும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது என்றும் சமீபத்திய நிலவரப்படி 257 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைவருக்கும் லேசான பாதிப்புகளே உள்ளதாகவும் இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் 95 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 27 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். மற்ற 68 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருந்தபோதிலும், பொதுமக்கள் அதிக மக்கள் கூடும் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று போன்ற ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், குறிப்பாக காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் மற்றும் நுரையீரல் சாா்ந்த இணைநோய்களால் பாதிக்கப்பட்டவா்களும் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
மீண்டும் கொரோனா… இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாவது இடம்!
கொரோனா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com