
சீனாவின் வூகானில் 2020 தொடங்கியது கொரோனா. பின் பல உருமாற்றங்களை (மியூடேசன்) அடைந்தது. இது பற்றி 100 நாடுகளின் கொரோனா பாதித்தவர்களை ஆய்வு நடத்திய லண்டன் பல்கலைக்கழகம் கொரோனா இதுவரை 12,700 உருமாற்றங்களை பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் குறைந்து இருந்தாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் குறைந்த பாடில்லை. உலகில் கொரோனா சமயத்தில் பல ஆச்சரியமான நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் சில சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகெங்கும் கொரோனா வைரஸ் 165 நாடுகளை தாக்கியபோது 1,52,00,00,00 0(152 கோடி) மாணவர்களும்,6 கோடி ஆசிரியர்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள்.இது மாதிரி இதுவரை நடந்ததில்லை தெரியுமா!
கொரோனா வைரஸ் தாக்குதலின்போது அதனை தவிர்க்க இந்தோனேசியாவின் பாலி தீவில் சானிடைஸ்சர்கள் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனை "பனை ஒயின் "கொண்டு சமாளித்தார்கள். அப்போது அங்கு 96 சதவீதம் சானிடைஸ்சர்களாக பயன்படுத்தப்பட்டது பனை ஒயினைத்தான். இந்தோனேஷியா நாட்டில் கொரோனா ஊரடங்கை மீறியவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் தெரியுமா?. அந்நகரில் உள்ள பொது டாய்லெட்களை சுத்தம் செய்யவேண்டும் என்பதுதான்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நாடுகளில் ஒன்று கொலம்பியா. இங்கு ஊரடங்கு சமயத்தில் கடைகளில் அத்தியாவசியமான பொருட்களை வாங்கி வர ஆண்களுக்கு ஒற்றை இலக்க நாட்களிலும், இரட்டை இலக்க நாட்களில் பெண்களுக்கும் அனுமதி அளித்தது அந்நாட்டு அரசு.
பிரிட்டனில் 2020-21 கல்வி ஆண்டில் வகுப்புகளில் நேருக்கு நேர் பாடங்கள் நடத்துவதில்லை என்று உலகிலேயே முதன் முறையாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் முடிவெடுத்தது காரணம் கொரோனா.
உலகிலேயே முதன் முறையாக 2020 ஏப்ரல் 20 ம் தேதி சிங்கப்பூரில் உள்ள தேசிய நீதிமன்ற நீதிபதி ஒருவர் "ஜூம் வீடியோ", மூலம் போதைப் பொருள் கடத்திய குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதித்தார். கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் இப்படி!
கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் போதும் ஜெர்மன் தன் நாட்டில் இருந்த முஸ்லிம்கள் ரமலான் பண்டிகை அன்று கிறித்தவ தேவாலயங்களில் தொழுகைகள் நடத்த அனுமதித்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3000 கார்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு வராமல் இருக்க சில்வர் கலவை பெயிண்ட்யை ஸ்பிரே செய்தார்கள். அந்த கலவை ஆன்டி வைரஸாக செயல்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா?என கண்டறிய பின்லாந்து நாட்டில் துப்பறியும் நாய்களை பயன்படுத்தியது. பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை 4 மாதம் பயிற்சி பெற்ற துப்பறியும் நாய்களை தங்களது மோப்ப சக்தி மூலம் கண்டறிய அனுமதித்தது.
தைவான் நாட்டில் சுற்றுலா அங்கு முக்கியமான வருமானங்களில் ஒன்று. கொரோனா காலகட்டத்தில் அந்நாட்டின் விமானங்கள் எங்கும் சுற்றுலா செல்ல முடியாமல் முடங்கியது. இதனால் தைவான் ஏர்லைன்ஸ் அந்த நிறுவன ஊழியர்களை சும்மா இருக்க வேண்டாம் என்று அந்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் நடத்த அனுப்பிவிட்டது.
கொரோனா நினைவாக ஆஸ்திரியா நாடு. கொரோனா தபால் தலை வெளியிட்டது. 10 செ.மீ அகலத்தில் 2.75 யூரோ மதிப்பில் இந்த தபால் தலை டாய்லெட் பேப்பரில் பிரிண்ட் செய்து வெளியிடப்பட்டது.
பிரிட்டனில் சேர்ந்த 72 வயது முதியவர் 'டேவா ஸ்மித் ' இவருக்கு 2021 ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. பிரிட்டன் பிரிஸ்டல் நகரைச் சேர்ந்த இவரை விட்டு கொரோனா விலகியது எப்போது தெரியுமா? 290 நாட்களுக்கு பிறகே. இதற்கிடையே சுமார் 10 மாதங்களில் 43 முறை பரிசோதிக்கப்பட்டது அப்போதும் அவருக்கு 'பாசிட்டிவ்' என்றே வந்தது. உலகிலேயே கொரோனா வைரஸால் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட நபர் இவர் மட்டுமே.