நாளை வாக்கு எண்ணிக்கை… தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

Security work
Security work

நாளை லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதை எதிர்பார்த்துதான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டிருக்கிறது. இதற்கான பாதுகாப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஒவ்வொரு கட்டங்களிலும் ஏறத்தாழ 60 சதவீத மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள். மூன்றாவது முறையும் மோடியே ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது புது மாற்றம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்புத்தான் மக்கள் மத்தியில் நிலவியிருக்கிறது.

அந்தவகையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுத்தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிவடைந்து சுமார் 45 நாட்கள் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.  வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 40,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களை கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.  அடுத்த அரை மணி நேரத்தில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணித் தொடங்கும்.  தபால் வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியான பிறகே, மின்னணு இயந்திரங்களின் கடைசி சுற்று வாக்குகள் எண்ணி முடிவு வெளியிடப்படும்.

அனைத்து மையங்களிலும் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்படவுள்ளன.  வாக்கு எண்ணிக்கை பணியில் 10,000 பணியாளர்கள், அவர்களுக்கு உதவியாளர்கள் 24,000 பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கான இறுதி கட்டப் பயிற்சி இன்று (ஜூன் 3) நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறதா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்? மகிழ்ச்சியில் தெலுங்கு தேசம் தொண்டர்கள்!
Security work

வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க 4,500 நுண்பார்வையாளர்கள் உட்பட 38,500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக விடியோ பதிவு செய்யப்படவுள்ளது.  39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, 39 மையங்களில் அமைந்துள்ள, 43 கட்டடங்களின் 234 அறைகளில் நடைபெறவுள்ளன.” என்று தெரிவித்துள்ளது.

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com