ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறதா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்? மகிழ்ச்சியில் தெலுங்கு தேசம் தொண்டர்கள்!

Chandrababu Naidu Jagan Mohan Reddy
Chandrababu Naidu Jagan Mohan Reddy

ந்தியா முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில், அம்மாநில சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டது. தற்போது அனைத்துகட்ட தேர்தல் வாக்குப் பதிவுகளும் முடிந்திருக்கும் நிலையில், கடைசியாக வெளியான கருத்துக் கணிப்பில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்திக்கும் எனவும், தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைக்கும் எனவும் கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி சுமார் 120 முதல் 130 இடங்களில் வெற்றி பெறும் எனவும், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 40 முதல் 45 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை ரோஜா முதற்கொண்டு ஆந்திர மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் தோல்வியை சந்திப்பார்கள் எனவும் அந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும், ஆந்திர மாநிலத்தின் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி 17 முதல் 18 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெறலாம் எனவும் அந்தக் கருத்துக் கணிப்பு தகவல்கள் கூறுகின்றன. கடப்பா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன எனவும் அந்தக் கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

இதையும் படியுங்கள்:
அனைத்துக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மக்களவையை வெல்லப்போவது யார்? புதிய கருத்துக் கணிப்பு!
Chandrababu Naidu Jagan Mohan Reddy

மேலும், தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி 9 முதல் 10 தொகுதிகளிலும், பாஜக 5 முதல் 6 தொகுதிகளிலும், பிஆர்எஸ் கட்சி 1 தொகுதியிலும், எம்ஐஎம் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெறும் என இந்தக் கருத்துக் கணிப்பு தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் கருத்துக் கணிப்புத் தகவல்களைக் கேட்டு ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேச கட்சித் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்திருக்கின்றனர். இந்த மகிழ்ச்சி நிலைக்குமா அல்லது கானல் நீராய் போகுமா என்பது நாளை மறுநாள் வாக்குப் பதிவு எண்ணிக்கை முடிவுக்குப் பிறகு தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com