கார் விபத்தில் சிக்கி கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பலத்த காயம்!

ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலையில் பயணித்த கார் விபத்துக்குள்ளாகி, அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று அதிகாலையில்  காரில் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் பயணம் செய்தபோது, சாலைத் தடுப்பில் கார் மோதி விபத்தில் சிக்கியது.

அதையடுத்து கார் தீப்பிடித்து எரியத் தொடங்க, ரிஷப் பந்த்திற்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரி மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப் பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com