#JUST IN : விசிக-வை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் தூது - விஜய்யின் முதல்வர் கனவு நிறைவேறுமா?

vijay cpi
vijay cpisource:minnambalam
Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று 108 இடங்களில் வெற்றியுடன் மேலும் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை இடங்கள் வேண்டுமென்ற நிலையில் இன்னும் ஆளுநரின் அனுமதி கிடைக்காத நிலையில் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அனுமதி கோரும் கடிதத்தை நேற்று தந்த தவெக தலைவர் விஜய் ஆளுநரிடமிருந்து பதில் வராததால் மீண்டும் இன்று காலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும் படி கோரிக்கை விடுத்தார். இருப்பினும் ஆளுநர் அந்த கோரிக்கையை ஏற்காமல் ஆட்சி அமைந்ததும் பெரும்பான்மையான இடங்களை எப்படி நிரூபிப்பீர்கள்? எந்த கட்சிகள் உங்களுக்கு ஆதரவு தரும் ?என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி உத்தரவு அளிக்காத நிலையில் இன்று நடைபெற இருந்த பதவி ஏற்பு விழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தாங்கள் வெற்றி பெற்ற ஐந்து இடங்களைத் தந்து தவெகாவிற்கு ஆதரவு அளிக்க ஆட்சி அமைக்க மேலும் ஐந்து இடங்கள் வேண்டும் என்ற நிலையில் விசிக உட்பட சில கட்சிகளின் ஆதரவு கோரி வருகின்றனர் தவெகவினர்.

ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவன் தன்னிடம் ஆதரவு கேட்டு விஜயிடம் இருந்து கடிதம் வந்ததாகவும் தங்கள் கட்சியினருடன் ஆலோசனை செய்து நாளை முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், 5 எம்எல்ஏக்கள் இருந்தால்தான் விரைவில் ஆட்சி கைக்கு வரும் என்ற நெருக்கடியில் இருக்கும் தவெக இன்று இ. கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆதரவை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஏற்கனவே கடிதம் மூலம் ஆதரவு கேட்டிருந்தாலும் இன்று தவெகவின் இணை பொது செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியனை கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் வந்து சந்தித்து ஆதரவை கேட்டுள்ளார்.

சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார் பேச்சு வார்த்தை நடத்தி முடிவை தெரிவிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் கூறினர் என்றும் தமிழக மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்பி எங்கள் தலைவருக்கு சுமார் ஒன்றரை கோடி வாக்குகளை அளித்ததுள்ளனர் .ஆகவே ஆட்சி அமைக்க எங்களை அழைக்க வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். சட்டப்படி ஆளுநர் எங்களை அழைக்க வேண்டும் . அப்படி அழைக்கவில்லை எனில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தலைமை முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் என் டி ஏ கூட்டணியில் உள்ள எந்த கட்சியிடமும் ஆதரவு கோர வில்லை எனவும் நிர்மல் குமார் தெரிவித்திருக்கிறார்.

தவெக ஆட்சி அமைக்க நெருக்கடிகள் இருக்கும் இந்த வேளையில் இ. கம்யூனிஸ்ட் மாநில செயலாளருடனான தவெகவின் இந்த சந்திப்பு முக்கியமானதாகும். இதையடுத்து அந்தக் கட்சிகள் தங்கள் ஆதரவை தவெக விற்கு தருமா? ஆட்சி விரைவில் விஜய் தலைமையில் அமையுமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : ஆளுநரை கண்டித்து நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..!
vijay cpi

மேலும் திமுக கூட்டணியில் உள்ள ஐ யூ எம் எல் தலைவர் காதர் மொய்தீனிடம் தவெகவின் அருண்ராஜ் ஆதரவு கோரியதாகவும் அதற்கு "திமுக கூட்டணியிலேயே தாங்கள் இருப்பதாகவும் திமுக தலைவர் கூறினால் தவெகவிற்கு ஆதரவு தருவோம் இல்லை எனில் இல்லை" என அவர் பதிலளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com