இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய், ஆன்லைன் மோசடிகளைத் தவிர்ப்பதற்கு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஸ்பேம் கால்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவ்வப்போது லோன் வேண்டுமா? இன்சுரன்ஸ் வேண்டுமா? என்று தொல்லை செய்கிறார்கள். இதனால், ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்கின்றன. மேலும், ஒரு கால் மூலம் ஒரு மெசேஜ் மூலம் ஹேக் செய்து நமது வங்கி தகவல்கள் முதல் சொந்த விஷயங்கள் வரை திருடுகிறார்கள்.
வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவது போல் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணத்தை அபகரிக்கிறார்கள். இதனால் அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். இந்த தொந்தரவுகள் குறித்து ட்ராய்க்கு பல புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது.
இதுகுறித்து ட்ராய் போட்ட உத்தரவில், “முன்பே பதிவு செய்யப்படாத மற்றும் பதிவு செய்யப்பட்ட, கணினியால் உருவாக்கப்பட்ட அனுப்புநர்கள் விளம்பர நோக்கத்துடன் கால் செய்யும் அனைத்து கால்களையும் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்.
இதுபோன்ற விதிமுறைகளில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாடிக்கையாளர்கள் ஸ்பேம் கால்கள் குறித்து புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட அனுப்புனரின் அனைத்து தொலைத்தொடர்பு விநியோகங்களையும் 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட அனுப்புனர்களை 2 ஆண்டுகள் ப்ளாக் லிஸ்ட்டில் வைக்க வேண்டும். இந்த ப்ளாக் லிஸ்ட் குறித்தான அனைத்து விவரங்களையும் 24 மணிநேரத்தில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அந்த குறிப்பிட்ட ஸ்பேம் கால் நம்பர்களை பிளாக் லிஸ்ட்டில் வைக்க வேண்டும்.
இதனால் ஸ்பேம் போன்ற தொல்லைகள் குறையும். இதனை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடைபிடிக்க வேண்டும். “ என்று உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளில் இருந்து URLs, APKs உள்ள எஸ்எம்எஸ் களை தடுக்க வேண்டும் என்றும், இதன் காரணமாக செல்பேசி நிறுவனத்தில் பதிவு செய்யாத வங்கிகளின் எஸ்எம்எஸ் இனி வாடிக்கையாளர்களை சென்றடையாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.