அதிமுகவின் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

அதிமுகவின்  சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் நேற்று இரவு 8.30 மணியளவில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், எம்பியுமான சி.வி. சண்முகத்திற்கு நேற்று இரவு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய சிகிச்சை தொடர்பாக அவர் அனுமதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2001ஆம் ஆண்டு திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட அவர் 2006 - ஆம் ஆண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு சட்ட பேரவைக்கு தேர்வு செய்யப் பட்டார். 2021ஆம் ஆண்டு விழுப்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவி அளிக்கப் பட்டது குறிப்பிடத் தக்கது.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்ட சி.வி. சண்முகத்திற்கு மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை. சி.வி.சண்முகம் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com