ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதளுக்கு உட்பட்டதால், டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் கடந்த ஆகஸ்ட் 1, 1951-ல் உருவானது. இது தனியார் நிறுவனமாக செயல்பட ஆரம்பித்தாலும் கூட 1987-ல் அரசுடைமையாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இந்த விமான நிறுவனம் முற்றிலுமாக தனியார்மயமாக்கப்பட்டது. ஜப்பான் ஏர்லைன்ஸில் முக்கிய மையங்கள் டோக்கியோவின் நரிட்டா, ஹனேடா, ஒசாகா, கன்சாஸி விமான நிலையங்களில் உள்ளது.
அந்தவகையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உட்பட்டதால், சிஸ்டம் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. சிஸ்டம் கோளாறு பற்றி அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், பிரச்னைக்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததாக விமான நிறுவனம் கூறியது. சிஸ்டம் செயலிழப்பை ஏற்படுத்திய ரூட்டரை தற்காலிகமாக மூடிவிட்டதாகவும், இன்று புறப்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான டிக்கெட் விற்பனையை நிறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
14 உள்நாட்டு விமானங்களுக்கான சேவையில் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாகவும் மேலும் சில சர்வதேச விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் ஏர்லைன்ஸ் வெளியிட்ட பதவில் “உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 7.25 மணிக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரானதும் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவலைப் பகிர்கிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.” என்று பதிவிட்டது.
இதனையடுத்து இன்று காலை 8.45 மணி போல மீண்டும் ஒரு பதிவை இட்டது. “பிரச்னை என்னவென்று அடையாளம் காணப்பட்டது. ஒரு ரவுட்டரை ஷட் டவுன் செய்துள்ளோம். இதனால் இன்றைக்கான உள்நாட்டு, சர்வதேச விமான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளது.
எப்போதும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும்போது விமானம் புறப்படுவதற்கு முன்னரே கண்டுபிடித்து சரி செய்வார்கள். ஆனால், இப்போதுதான் இதுபோல் சைபர் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால், இது தற்போது உலகளவில் பேசப்பட்டு வருகிறது.