அதி தீவிர புயலாக மாறியுள்ள பைபர்ஜாய் புயல்: குஜராத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்!

அதி தீவிர புயலாக மாறியுள்ள பைபர்ஜாய் புயல்: குஜராத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்!

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பைபர்ஜாய் புயல் தீவிர நிலையில் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிதீவிர நிலையில் உள்ள பைபர்ஜாய் புயல் குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும். புயல் கரையை கடக்கும் பகுதி வரும் நாள்களில் தெளிவாக தெரியவரும். இந்த புயல் தெற்கு, தென் மேற்கு குஜராத் மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லை பகுதிகளை மையமாகக் கொண்டு கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 4.30 மணி அளவில், பைபர்ஜாய் புயலானது மத்திய கிழக்கு அரபிக் கடலில் 8 கிமீ வேகத்தில் வடகிழக்கு நோக்கி நகர்ந்து வந்தது. மும்பையில் இருந்து 550 கிமீ தொலைவிலும், போர்பந்தரில் இருந்து 450 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone
Cyclone

இது தொடர்பாக குஜராத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் குஜராத் அரசு களத்தில் இறக்கி 6 மாவட்டங்களில் முகாமிட வைத்துள்ளது. மேலும், மாவட்ட வாரியாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் புபேந்திர படேல் அமைச்சர்களை நியமித்துள்ளார். அத்துடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவும் முன்னெச்சரிக்கை ஏற்படுகள் குறித்து ஆய்வு செய்தார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மும்பை விமான நிலைய ரன்வேக்கள் மூடப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அரபிக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கடற்கரை பகுதிக்கும் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.

ஜூன் 15ஆம் தேதி மதியம் இந்த புயல் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் வழியாக கரையை கடந்து பாகிஸ்தான் கராச்சி நோக்கி செல்லும் எனவும், அந்த நேரத்தில் காற்றின் வேகம் 125-135 கிமீ இல் இருந்து 150 வரை செல்லக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலின் பாதிப்பு குஜராத்தில் மிக மோசமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com