மக்களே உஷார்..! நாளை மறுநாள் உருவாகிறது 'சென்யார்' புயல்; 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்..!

red, yellow, orange  rain alert
red, yellow, orange rain alert
Published on

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் (நவ.,26) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இவ்வாறு உருவாகும் புயலுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமி ரேட்ஸ் பரிந்துரைப்படி, 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 29 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று (24.11.25) கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (நவ.,25) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்

நாளை மறுநாள் (நவ.,26) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை

நவ.,29ல் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர்

நவ.,29ல் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்:
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு... பின்னணி என்ன?
red, yellow, orange  rain alert

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com