

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கட்டுமான நிறுவனமான 'டேக் டெவலப்பர்ஸ்'(DAC Developers) தன்னுடைய நிறுவனத்தின் புதிய பிராண்ட் அம்பாசிடராக உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அறிவித்துள்ளது.
ஆயிரம் வீடுகள் கொண்ட 5 புதிய குடியிருப்புத் திட்டங்கள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டங்கள் காட்டுப்பாக்கம், சுங்குவார்சத்திரம், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் உள்ள குமணன்சாவடி, சோழிங்கநல்லூர் மற்றும் சிறுசேரி ஆகிய பகுதிகளில் கட்டப்படவுள்ளது. இவை மக்களுக்கு சகல வசதிகளுடன் அட்டகாசமான குடியிருப்பு சூழலை உருவாக்குவதுடன், எதிர்கால மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் சிறந்த இல்லமாகத் திகழும்.
பிராண்ட் அம்பாசிடர் அறிமுக நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான ஏ.ஆர். ரஹ்மான் முன்னிலையில் சென்னையில் இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நிறுவனத்தின் இயக்குனர் எஸ்.சதீஷ்குமார் மேடையில் பேசும்பொழுது ஏ.ஆர். ரஹ்மானின் படைப்பாற்றல் மற்றும் துல்லியம் தங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுடன் ஒத்துப் போவதாகவும், அவருடன் இணைவதில் பெருமிதம் கொள்வதாகவும் கூறினார். அளவிடற்கரிய திறமைக்காக உலக அளவில் கொண்டாடப்படும் ஏ.ஆர். ரஹ்மானின் பயணம், நீண்டகால மதிப்புடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கட்டுமானங்களை வழங்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டுடன் நெருக்கமாக ஒத்துப் போகிறது என்று கூறினார்.
15 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் டேக் டெவலப்பர்ஸ் நிறைய பெரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் புதிய திட்டங்கள் நிறைய செயல்படுத்தி இருப்பதாகவும் கூறினார். ஓ.எம்.ஆர் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்ட் ஒரு வில்லா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், 20 லட்சத்திலிருந்து 4 கோடி வரை அப்பார்ட்மெண்ட், வில்லா என அனைத்தும் உள்ளது என்றும் கூறினார்.
டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம் வரவிருக்கும் நாட்களில் ஏ.ஆர். ரஹ்மானை பிராண்ட் அம்பாசிடராகக் கொண்டு டிஜிட்டல், பிரிண்ட், ஹோர்டிங்ஸ் மற்றும் டிவி விளம்பரங்களை வெளியிட உள்ளது. நம்பகத்தன்மை, சிறந்த வடிவமைப்பு மற்றும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்றவாறு வாழும் இல்லங்களைத் தேடும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் இந் நிறுவனத்தின் நற்பெயரை வலுப்படுத்த இந்த முயற்சி உதவும் என்றும் அதன் இயக்குனர் எஸ். சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், நம் கனவுகள் அனைத்தும் உருவாகும் இடம் வீடு தான். தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகிய டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் ஒரு இனிமையான புதிய அத்தியாயத்தை தொடங்குவதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். மகிழ்ச்சி நிறைந்த இல்லங்களை உருவாக்கி வரும் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைவதுடன் அந்த நிறுவனத்தின் விழுமியங்களை தான் மதிப்பதாகவும் கூறினார்.