ஜி 20-இல் இடம்பெற்றுள்ள உணவுகள் லிஸ்ட்..!!

ஜி 20-இல் இடம்பெற்றுள்ள உணவுகள் லிஸ்ட்..!!
Editor 1

ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு டெல்லி சாந்தினி சவுக்கில் தொடங்கி தமிழ்நாட்டின் காரைக்குடி வரை உள்ள பிரபலமான உணவுகள் மற்றும் ஸ்ட்ரீட் food- கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.  

இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, 2023 ஆம் ஆண்டு திணை ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தலைவர்களுக்கு வழங்கப்பட உள்ள மெனுவில் திணை வகைகளால் சமைக்கப்பட்ட உணவுகள் முக்கிய அங்கம் வகிக்க இருக்கின்றன.

ராகி லட்டு, பார்லி கீர், ராகி பர்ஃபி மற்றும் ராகி தோசை, காஜு பிஸ்தா ரோல், ராகி பாதம் பின்னி, ராகி பணியாரம், millet கோலா உருண்டை, வாழைப்பூ வடை என 700- க்கும் மேற்பட்ட உணவுகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐ.டி.சி மௌரிய, தாஜ், லீலா பேலஸ், ஷங்கிரி லா, ராயல் பிளாசா, லீ மெரிடியன், ஓப்ராய் என டெல்லியில் உள்ள சர்வதேச தர ஹோட்டல்களில் சமையல் கலைஞர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். 

குறிப்பாக இந்தியாவின் வளமான விவசாய பாரம்பரியத்தைப் பற்றி உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களின் துனைவியர்களுக்கு உணர்த்தும் வகையில், டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் From Farm To Fork என்ற தலைப்பில் இந்திய பாரம்பரிய விதைகள் மற்றும் தானியங்கள் கண்காட்சிக்கும், நேரடி சமையல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் millet ரங்கோலிகளும், பாரம்பரிய தினை விதைகள் பாதுகாப்பில், புரட்சி செய்த மத்திய பிரதேசத்தின் திண்டோரி சேர்ந்த பழங்குடியின பெண் விவசாயி லஹ்ரி பாயின் படைப்புகளும் இடம்பெற உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com