கேப்டன் உடல்நிலை எப்படி இருக்கு? மகன் பிரபாகரன் பரபரப்பு பேட்டி!
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு தான் என அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவன தலைவரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன், இளைய மகன் திரைப்பட நடிகர் சண்முக பாண்டியன், இருவமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கேப்டன் விஜயகாந்தின் உடல்நலத்தில் சற்று பின்னடைவு தான், ஆனால் கேப்டன் விஜயகாந்த் 100 வருடம் நல்லா இருப்பார், அவர் பழையபடி பேசுவார், எழுந்து வருவார் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். உங்களை மாதிரியே நாங்களும் நம்புகிறோம். இப்போது வரைக்கும் கேப்டன் நலமாக தான் இருக்கிறார். கேப்டனின் மந்திரமே "முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது" என சொல்லுவார். அதைதான் எங்களது தாரக மந்திரமாக எடுத்துள்ளோம். என்னுடைய கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்களுக்காக ஓடோடி வந்து வேலை செய்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வு தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவதும் உள்ளது. இதனை அரசியல் ஆக்காமல் சரியான விஷயத்தை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை விட பின் தங்கிய மாநிலங்களில் கூட இறப்பு குறைவாக தான் உள்ளது நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என பொய்யான வாக்குறுதியை திமுக அரசு கூறுவதால் மாணவர்களுக்கு இன்னும் அழுத்தம் ஏற்படுகிறது" என்றும் தெரிவித்தார்
இதனை கேட்ட அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் நிச்சயமாக மீண்டு வருவார் என தெரிவித்து வருகின்றனர்.