அது ஜெயிலா இல்ல 5 ஸ்டார் ரிசார்ட்டா?

Darshan Thoogudeepa in  prison
Darshan Thoogudeepa in prison
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

கர்நாடகாவின் பிரபலமான முன்னணி நடிகர் தர்ஷன். இவரது இரசிகர்கள் இவரை செல்லமாக 'D பாஸ்' என்று அழைக்கின்றனர். ஏற்கனவே திருமணமான தர்ஷனுக்கு நடிகை பவித்ரா கவுடாவுடன் கள்ளக்காதல் இருந்தது. இந்த கள்ளக்காதலை கை விடும் படி தர்ஷனின் ரசிகர் ரேணுகா சாமி பவித்ரா கவுடாவிற்கு மெசேஜ் அனுப்பி வலியுறுத்தினார். பின்னர் அவரை ஆபாசமாக திட்டி மெசேஜ்களையும் அனுப்பி உள்ளார். இதனால் பவித்ரா கவுடா தர்ஷனிடம் புகார் கூறினார். இந்நிலையில் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டார். நடிகர் தர்ஷன் தான் ரேணுகா சாமியை ஆள் வைத்து கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தர்ஷனின் கள்ளக்காதலி பவித்ரா கவுடா பெங்களூரு சிறையில் உள்ளார்.

இந்த கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள கன்னட நடிகர் தர்ஷன், பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் 3 பேருடன் சொகுசாக இருக்கும் புகைப்படம் வைரலானது. சிறை உடையின்றி சாம்பல் நிற டீ சர்ட்  அணிந்த தர்ஷன் கையில் காபி கப்  வைத்துக்கொண்டு சிகரட் பிடித்தபடி சக கைதிகளுடன் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார். சிறையில் அவருக்கு டீ மேஜை , நாற்காலி எல்லாம் போடப்பட்டு இருந்தது . மற்ற கைதிகளும் சிறை சீருடை அணியவில்லை. அவர்கள் ஏதோ பிக்னிக் வந்த ரிசார்ட்டில் இருப்பது போல புகைப்படங்கள் உள்ளன. சிறையில் இருந்து தர்ஷன் வீடியோ அழைப்பில் பங்கேற்பதைக் காட்டும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது. சிறையில் அவருக்கு நிறைய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. இதனால் தான் தர்ஷன் ஜாமீன் கோராமல் இருந்தார் போல. 

இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையைத் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கியதாகக் கூறி தலைமை சிறைக் கண்காணிப்பாளர் உட்பட 9 சிறை அதிகாரிகள் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதையும் படியுங்கள்:
மரத்திற்கு Jackets போட்டுவிடும் துருக்கி மக்கள்… என்ன காரணம்?
Darshan Thoogudeepa in  prison

போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக 3 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சிறைச்சாலை சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகின்றன. குற்றவாளிகளை இடம் மாற்ற பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றார். 

பொதுவாக சிறைச்சாலையை மாமியார் வீடு என்று கிண்டலடிப்பார்கள். தர்ஷன் விஷயத்தில் அது உண்மையாகி விட்டது. இவ்வளவு சலுகைகள் குடுத்தால் அவர் எதுக்கு வெளியில் செல்ல ஆசைப்படப் போகிறார்? அங்கேயே டேரா போட தான் நினைப்பார்!

logo
Kalki Online
kalkionline.com