பிரம்மாண்டமாக கட்டப்படும் அயோத்தி ராமர் கோயில்.. பக்தர்கள் தரிசனம் எப்போது தெரியுமா?

ராமர் கோயில் மாதிரி படம்
ராமர் கோயில் மாதிரி படம் Intel

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 2024 ஜனவரி மாதம் 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்பட்டு பக்தர்கள் வழிபடுதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி கோவில் கருவறையில் ராமர் சிலை ஜனவரி மாதம் பிரதிஷ்டைசெய்யப்படும் என்றும் கோவில் தரைத்தளத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கோயிலின் தரைதளத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் ராமர் சிலை நிறுவப்படும். அன்றைய தினம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராய், அயோத்தி ராமர் கோவில் தரைத்தளத்தில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. அக்டோபர் மாதத்துக்குள் இப்பணி முற்றிலும் முடி வடையும். பிறகு இறுதி வடிவம் அளிக்கும் பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்றார். மேலும், 5 வயதான குழந்தை வடிவ ராமர் சிலை, முதல் மாடியில் நிறுவப்படும். கர்ப்பகிரகத்தில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் பணி ஜனவரி 15-ந் தேதியில் இருந்து 24-ந் தேதிக்குள் நடக்கும் என்று தெரிவித்தார். கோயில் கட்டுமானத்தில் மார்ப்பிள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மராட்டிய தேக்குகளால் கோவில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவில் கதவுகளில் மர வேலைப்பாடுகள் தொடங்கி உள்ளது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழுதுபார்ப்பு பணிகள் தேவைப்படாது. 152 தூண்கள் தயாராக உள்ளன. அவற்றில் 4500 விக்ரகங்கள் செதுக்கப்பட்டு வருகின்றன. தூண்களை செதுக்கும் பணியில் கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 40 கைவினைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் 24 விக்ரகங்கள் செதுக்கப்படுகின்றன.

இந்த பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ராமர் கோவில் கட்ட 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ராமர் கோவில் பணிகள் முடிவடைய உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com