பாடல் கேட்டதால் தூக்கு தண்டனை… வடகொரியாவில் கொடூரம்!

North Korea Pesident
North Korea Pesident

பல கொடூரமான தண்டனைகள் கொடுக்கும் நாடு வடகொரியா. அந்தவகையில் ஒரு இளைஞன் படம் மற்றும் பாடல் பார்த்ததால் பொதுவெளியில் தூக்கு தண்டனை வழங்கிய சம்பவம் உலக நாடுகளை அச்சத்தில் தள்ளியது.

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்கள் மேக்கப், உடையிலிருந்து திரைப்படம் பார்ப்பதுவரை மக்களின் சொந்த விஷயத்தில் கூட அரசின் தலையீட்டு இருப்பதுபோல சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இங்கு தேர்தல் என்பது நடத்தப்படுவது இல்லை. வொர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் நார்த் கொரியா (Workers Party of North Korea) என்ற கட்சியை சேர்ந்தவர்கள் தான் காலம் காலமாக அதிபராக உள்ளனர்.

அதாவது கிட்டத்தட்ட மன்னராட்சி போலத்தான் அதிபர் தேர்வு செய்யப்படுவார். வடகொரியா சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் மட்டுமே நெருக்கமாக செயல்படுகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அதோடு அமெரிக்காவுக்கு அடிக்கடி மிரட்டல் விடும் செயலையும் வடகொரியா மேற்கொண்டு வருகிறது.

இவர் பல கட்டுப்பாடுகளை வழங்குவதால், உலக நாடுகள் அவரி செயல்களை எதிர்த்தே வருகின்றனர். ஆனால், அவர் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் ஆட்சி செய்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது ஒரு புதிய தகவல் வந்து உலகமக்களை திடுக்கிட வைத்தது. அதாவது 22 வயதான இளைஞர் ஒருவர் கே பாப் பாடல்கள் மற்றும் 3 திரைப்படங்கள் பார்த்தார். அதாவது கே பாப் (K Pop) என்பது பிரபலமான கொரிய இசை பாடல்களாகும். இது பல நாடுகளில் பிரபலமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
லங்காவியை முஸ்லீம்களின் இடமாக அறிவிக்குமாறு பரிந்துரை… அமைச்சர் மன்னிப்பு!
North Korea Pesident

இது தென்கொரியாவில் உருவானது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் பிரச்சனை உள்ள நிலையில் இந்த பாடல்களை கேட்க கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். அந்த இளைஞர் அதனைப் பகிர்ந்தளித்தும் இருக்கிறார். இதனால், அவர் பிற்போக்கு சித்தாந்தம் மற்றும் கலாச்சாரத்தை தடை செய்யும் சட்டத்தை மீறியதாக கூறி தூக்கிலடப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த மக்கள், நாம் மட்டும் ஏன் இப்படி வாழ வேண்டும். இப்படியான அடிமையான வாழ்க்கை வாழ்வதற்கு பதில் சாவதே மேல் என்று தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com