டீப் சீக் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு… இனி ஊழியர்கள் யாரும் வெளிநாடே செல்லக்கூடாது!

deep seek
deep seek
Published on

சீனாவின் முன்னணி ஏஐ தொழில்நுட்பமான டீப் சீக் தனது ஊழியர்களுக்கு ஒரு பெரிய கட்டுபாடை விதித்துள்ளது.

சமீபக்காலமாக ஏஐயின் வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் கூட தனது போனில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI. இவையனைத்தையும்விட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர்.

இதனால் ஏஐ தொழில்நுட்பம்தான் தற்போது உலகையே கைக்குள் போட்டு வருகிறது. குறிப்பாக சீனா கண்டுபிடித்த டீப் சீக் ஏஐ ஆனது இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. டீப் சீக்  அமெரிக்க நிறுவனங்களின் ஏஐ ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போன்ற க்ளோஸ்ட் சோர்ஸ் ஏஐ போல இல்லாமல், இது ஓப்பன் சோர்ஸ் ஆகும். இதனை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அணுகலாம்.

அமெரிக்காவின் ஏஐ தொழில் நுட்பங்களையெல்லாம் முறியடிக்கும் விதமாகதான் டீப் சீக் இருந்து வருகிறது. ஆகையால், டீப் சிக் தொழில்நுட்பத்தின் ரகசியத்தை அறிய பல நாடுகளும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் டீப் சீக்கில் வேலை செய்யும் ஊழியர்களை விலைக்கு வாங்கி ரகசியத்தை அறிந்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக வதந்திகள் பரவின.

ஆகையால், டீப் சீக்கில் வேலை செய்பவர்களுக்கு அந்த நிறுவனம் பல கட்டுபாடுகளை விதித்துள்ளது.

தற்போது டீப் சீக் நிறுவனம் தனது ஊழியர்களின் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிர்வாகத்தின் அனுமதியின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த கட்டுபாடு தற்போது உயர்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமே. வரும் காலத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த கட்டுபாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.  இது ஊழியர்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக இந்த நடவடிக்கைக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:
தலைக்கு ஷாம்பூ போடும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த 6 தப்பை செய்யாதீங்க!
deep seek

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com