

டெல்லியில் காற்றின் மாசு 'ஆபத்தான நிலையை' எட்டியதைத் தொடர்ந்து, தேசிய தலைநகரில் GRAP வழிகாட்டுதலின் மூன்றாம் கட்டம் (Stage-3) அமுல்படுத்தப்பட்டுள்ளது.
GRAP திட்டம் என்றால் என்ன?
GRAP (காற்றின் மாசைக் கட்டுப்படுத்தும் அடுக்குமுறைத் திட்டம்) என்பது டெல்லி-NCR பிராந்தியத்தில் குளிர் காலத்தில் காற்றின் மாசு அளவைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட முதன்மையான கட்டமைப்பாகும்.
இது காற்றின் தரத்தை AQI (காற்றுத் தரக் குறியீடு) அளவுகளின் அடிப்படையில் பின்வரும் நான்கு கட்டங்களாகப் (Stages) பிரிக்கிறது:
கட்டம் I (மோசம் / Poor): AQI அளவு 201–300 வரை.
கட்டம் II (மிகவும் மோசம் / Very Poor): AQI அளவு 301–400 வரை.
கட்டம் III (தீவிரம் / Intense): AQI அளவு 401–450 வரை. (இதுவே தற்போது அமுலில் உள்ளது).
கட்டம் IV (அதிகத் தீவிரம் / Severe Plus): AQI அளவு 450-க்கு மேல்.
இந்த அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, காற்றின் மாசைக் கட்டுப்படுத்தும் அடுக்குமுறைத் திட்டத்தின் (GRAP) மூன்றாவது கட்ட (Stage-3) நடவடிக்கைகளை அரசு உடனடியாக அமுல்படுத்தியுள்ளது.
ஐந்தாம் வகுப்பு வரை ஒருங்கிணந்த கற்பித்தல் முறை
மாநில அரசு எடுத்துள்ள மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கல்வி நிறுவனங்கள் தொடர்பான அறிவிப்பு இது.
அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்ததன்படி:
"அதன்படி, கல்வித் துறை (DoE), NDMC, MCD மற்றும் டெல்லி கண்டோன்மென்ட் போர்டு ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான வகுப்புகளை ஒருங்கிணந்த முறையில் (Hybrid Mode) அதாவது, நேரடி வகுப்பு முறை (Physical) மற்றும் இணையவழி (Online) ஆகிய இரு முறைகளிலும் (இணையவழி முறை சாத்தியமான இடங்களில்) அடுத்த உத்தரவு வரும் வரை உடனடியாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்."
GRAP-3 இன் பிற அமுலாக்கங்கள்
GRAP-இன் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் ஏற்கனவே அமுலில் உள்ள கட்டுப்பாடுகளின் மீது, மேலும் கடுமையான கூடுதல் நடவடிக்கைகளை மூன்றாம் கட்டம் (Stage III) கொண்டு வருகிறது.
GRAP-3 திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கான ஆணையைத் தவிர, வேறு சில கடுமையான தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன:
அத்தியாவசியமில்லாத கட்டுமானங்கள் மற்றும் பழைய கட்டிடங்களை உடைக்கும் வேலைகள் முற்றிலும் தடை (Ban on non-essential construction and demolition).
பாறைகளை உடைக்கும் தொழிற்சாலைகளும் (Stone Crushers) சுரங்கச் செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.
டெல்லி-NCR பகுதிகளில் BS-3 பெட்ரோல் ரக மற்றும் BS-4 டீசல் ரக நான்கு சக்கர வாகனங்களின் இயக்கத்திற்குத் தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.