

மோசடி வலை விரித்தவனை, அவனது வலைக்குள்ளேயே சிக்க வைக்க முடியுமா? ஆம், சைபர் உலகில் இது சாத்தியமானது! ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது.
தன்னை ஏமாற்ற நினைத்தவரை தன் சாமர்த்தியத்தால், chatgpt மூலம் அந்த மோசடிப் பேர்வழியின் இருப்பிடத்தைக் கண்டறிந்து பிடித்தது எப்படி? இறுதியில், அந்த மோசடி ஆசாமியை வைத்தே மன்னிப்புக் கேட்க வைத்தது எப்படி?
இந்தச் சம்பவம், ஃபேஸ்புக்கில் வந்த ஒரு சந்தேகத்திற்கிடமான செய்தியோடு தொடங்கியது.
செய்தி அனுப்பியவர், இராணுவத்தில் தான் ஒரு மூத்த அதிகாரி என்று கூறி ஆள்மாறாட்டம் என்ற வலையை விரித்தான்.
"நான் ஒரு CRPF அதிகாரி, எனக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிவிட்டது " அதனால், எனது விலை உயர்ந்த பொருட்களைக் குறைவான விலைக்கு விற்கிறேன்.
நீ வாங்கிக் கொள்ளலாம்" என்று ஆசையைக் காட்டினான். உண்மையில், அந்த ஆள்மாறாட்ட நபர் கூறிய சீனியர் அதிகாரி தன்னுடைய நண்பர் தான் என்பது அந்த ஏமாற்றுப் பேர்வழிக்குத் தெரியாது.
அந்த சீனியரிடம் ஏற்கனவே இளைஞனின் நேரடித் தொலைபேசி எண் உள்ளது. அப்படியிருக்க, அவர் ஏன் ஃபேஸ்புக் மூலம் பேசுகிறார்?
உடனே, இளைஞன் தன் உண்மையான சீனியரிடம் விசாரித்தான். இது ஒரு ஃபிஷிங் மோசடி என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஆனால், இதை சும்மா கடந்து செல்ல அவர் விரும்பவில்லை. அந்த மோசடி கும்பலை, அவர்கள் ஸ்டைலிலேயே திருப்பி அடிக்க முடிவெடுத்தார்.
மோசடிப் பேர்வழி வேறு ஒரு எண்ணில் இருந்து பேசத் தொடங்கினான். அதில் ஒரு ராணுவப் புரொஃபைல் படமும் இருந்தது. உடனடியாகப் பணத்தை அனுப்பச் சொல்லி ஒரு QR குறியீட்டையும் அனுப்பினான்.
ChatGPT-யால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் வலை
அப்போதுதான் அந்த இளைஞனின் புத்தி வேலை செய்தது. பணம் செலுத்துவதில் தொழில்நுட்பப் பிரச்னை இருப்பதாகக் கூறி, அவனைத் தாமதப்படுத்தினார்.
அதே நேரத்தில், அவர் தன் லேப்டாப்பை திறந்து, ChatGPT-யை நாடினார். அவர் கொடுத்த டாஸ்க் சிம்பிளானது:
ChatGPT சில நொடிகளில் அந்த ஆபத்தான கோடுகளை உருவாக்கியது. அது HTML மற்றும் JavaScript கோடுகள்.
அடுத்த சில நிமிடங்களில், அந்த இளைஞன் ஒரு டிராக் செய்யும் இணையப் பக்கத்தை உருவாக்கினார்.
அந்த லிங்கை மோசடி ஆசாமிக்கு அனுப்பினார். "இந்த QR குறியீட்டை நீங்கள் இங்கேயே அப்லோடு செய்தால், பணம் செலுத்தும் செயல் விரைவாகும்!" என்று கூறி ஆசையைத் தூண்டினார்.
உச்சக்கட்ட க்ளைமாக்ஸ்!
பணம் சீக்கிரம் கிடைக்கும் என்ற பேராசையிலும், அவசரத்திலும் இருந்த மோசடிப் பேர்வழி, லிங்கை கிளிக் செய்தான். அவ்வளவுதான்! அவன் வலையில் சிக்கினான்.
மறுமுனையில், இளைஞனுக்குத் தேவையான அத்தனை தகவல்களும் வந்து சேர்ந்தன:
மோசடி ஆசாமியின் துல்லியமான GPS இருப்பிடம்.
அவனது IP முகவரி.
முன்புற கேமராவில் பதிவான அவனது தெளிவான புகைப்படம்.
உடனடியாக, அந்த இளைஞன் மோசடிப் பேர்வழிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். தான் எடுத்த புகைப்படத்தையும், இருப்பிட விவரங்களையும் திருப்பி அனுப்பினான்.
மோசடிப் பேர்வழி அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டான். அடுத்த சில நிமிடங்களில், இளைஞனுக்குத் தொடர்ச்சியாக மெசேஜ்கள் வந்தன.
தான் செய்த தவறை மன்னிக்கும்படியும், இனியும் இது போன்று செய்ய மாட்டேன் என்றும் அவன் கண்ணீருடன் மன்றாடினான்.
இந்தச் சம்பவத்தை இளைஞன் ரெடிட்டில் பதிவிட்டார். "ChatGPT-யை பயன்படுத்தி ஒரு மோசடிப் பேர்வழியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அவனைக் கெஞ்ச வைத்தேன்" என்று தலைப்பிட்டார்.
தொழில்நுட்பம் எப்போதும் ஒரு பக்கம்தான் வேலை செய்யும் என்று நினைத்த மோசடி ஆசாமிக்கு, இது ஒரு அதிர்ச்சி வைத்தியம்.
அறிவும், சரியான நேரத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறனும் இருந்தால், மோசடி கும்பலை நம் வீட்டு சோஃபாவில் இருந்தே மடக்கிப் பிடிக்கலாம்!