delhi red fort car blast
delhi red fort car blast

டெல்லி கார் குண்டுவெடிப்பு: கார் ஓனர் கைது? நாடு முழுவதும் உஷார் நிலை..!!

டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு விவரம் இங்கே....
Published on

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறியது. இதில் அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. எதிர்பாராத இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நின்றிருந்தவர்களும், சாலையில் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. அப்போது சாலையில் வாகனங்களில் இருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நிலைகுலைந்து போயினர். இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் அங்கு விரைந்தனர். தீயணைப்பு பணி துரிதமாக நடந்தது.

இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உடல் சிதறி இறந்தனர். அவர்களது விவரம் உடனடியாக தெரியவில்லை. இதில் பலத்த காயமடைந்த 24 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்புகள் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

கார் வெடித்துச் சிதற காரணம் என்ன? என்று தெரியவில்லை. பேட்டரி கோளாறு களால் வெடித்ததா? அல்லது கியாஸ் சிலிண்டர்களால் விபத்து ஏற்பட்டதா? என கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மூன்றே நாட்களில் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்!
delhi red fort car blast

எனினும் சம்பவ இடத்தில் குண்டுவெடிப்புக்கான குழிகளோ அடையாளங்களோ இல்லையென்று கூறப்பட்டாலும், சிறிய கார் வெடித்து இந்தளவுக்கான பாதிப்பு ஏற்படுவதற்கு சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ. களம் இறங்கியுள்ளது. தடயவியல் நிபுணர்களும் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கார் வெடிப்பு சம்பவம் எதிர்பாராமல் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலையா என்பது தொடர்பான காவல்துறை விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரின் பதிவு எண் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதன் உரிமையாளரையும், காரின் முந்தைய உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

இந்த கார் அரியானவை சேர்ந்த நதீம் கான் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காரின் முன்னாள் உரிமையாளர் முகமது சல்மானையும் குருகிராம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தநிலையில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் காஷ்மீரில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், 3 ஆயிரம் கிலோ வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே இவரை இரண்டிற்கும் தொடர்ப்பு இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

டெல்லியில் நடந்த பயங்கர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு படையினர் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் கடுமையான சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லி போலீஸ் அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.), தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்கவும் அவர் உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, அமித்ஷாவை தொடர்புகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதுடன், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கோவையில் கார் குண்டு வெடிப்பு! 'உபா' சட்டத்தில் கைது!
delhi red fort car blast

டெல்லியில் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி ஐகோர்ட்டு வளாகத்தின் 5-வது நுழைவு வாயில் பகுதியில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக இறந்தனர். 79 பேர் காயத்துடன் உயிர்தப்பினர். இந்தநிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com