மூன்றே நாட்களில் மீண்டும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்!

Kashmir
Kashmir
Published on

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில், மீண்டும் அங்கு தாக்குதல் அரங்கேறியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பல ஆண்டுகளாகவே பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், சமீபக்காலமாக அடிக்கடி தாக்குதல் நடைபெறுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷிவ்கோடா கோவிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சம்பவம் அறிந்த உடனே போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் 10 பேர் பலியாகினர்.

இதனையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த தாக்குதலை நடத்தியது ரஜோரி, பூஞ்ச் மற்றும் ரியாசியின் மேற்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதக் குழு என தெரியவந்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது பேருந்து, ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இந்தச் சம்பவத்தில் மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். பள்ளத்தில் விழுந்தவர்களை ட்ரோன்கள் மூலம் தூக்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஏறதாழ 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை நடத்திய போலீஸார் ஒரு வரைபடத்தை வெளியிட்டு, தகவல் தருவோருக்கு 20 லட்சம் பரிசுத்தொகை என்று அறிவித்தனர்.

இதனையடுத்து தற்போது டோடாவின் சாட்டெர்கலா பகுதியின் பதர்வா – பதன்கோட் சாலையில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஐந்து ராணுவ அதிகாரிகளும், காவலர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனையடுத்து கூடுதல் ராணுவ வீரர்கள் அந்தப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
இன்று ஆந்திரா முதல்வராகப் பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!
Kashmir

மூன்றே நாட்களில் மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளதால், உடனே பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கதுவா மாநிலத்தின் சில கிராமங்களில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு படையினர் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதியை சுட்டுக் கொன்றுவிட்டனர் என்ற செய்திகள் கசிந்துள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னும் வெளிவரவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com