#BIG UPDATE : பாலிவுட் நடிகர் தர்மேந்திரா நலமாக உள்ளார்: குடும்பத்தினர் விளக்கம்..!

Dharmendra
Dharmendrasource:www.prabhatkhabar.com
Published on

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தர்மேந்திரா வயது மூப்பின் காரணமாக மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் போனதால் காலமானதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

மருத்துவனையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. மேலும் நேற்றைய தினம் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான் உள்ளிட்டவர்கள் மருத்துவமனை சென்று அவரைப் பார்த்தபோதே அவரது உடல்நலம் மிகவும் மோசமானதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரது குடும்பத்தினர் இதை மறுத்து வந்தனர்.

இந்த நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது மனைவி ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “என்ன நடக்கிறது என்பது மன்னிக்க முடியாதது. பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளித்துவரும் நிலையில், பொறுப்புமிக்க செய்தி ஊடகங்கள் எவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பமுடியும். இது மிகவும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோலும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:
எடுத்தால் குறைவது செல்வம்; கொடுத்தால் வளர்வது கல்வி!
Dharmendra

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com