சர்க்கரை நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; குறைந்த கிளைசெமிக் கொண்ட அரிசி கண்டுபிடிப்பு!

Rice Agriculture
Rice Agriculture
Published on

உலகில் அதிகளவில் அரிசி உண்பவர்கள் ஆசிய கண்டத்தில் உள்ளவர்கள். அதிலும், குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதியில் அரிசி தான் மக்களின் தினசரி உணவாக உள்ளது. தென்னிந்திய மக்கள் மூன்று வேளையும் அரிசி உணவை உண்ணுவதை தான் விரும்புகிறார்கள். உலகின் நீரிழிவு நோயாளிகளில் 60 சதவீதம் பேர் ஆசிய கண்டத்தில் வசிக்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் அதிக கார்போஹைட் நிறைந்த அரிசி உணவு வகைகளை உண்ணக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனாலும் அரிசிக்கு பழகிய அவர்களால் தங்கள் உணவு பழக்கத்தினை அவ்வளவு எளிதாக கைவிட முடிவதில்லை.

உலகளவில் அதிகரித்து வரும் நீரிழிவு நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் முயற்சியில், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI), CGIAR ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், குறைந்த கிளைசெமிக் கொண்ட அரிசி மரபணுக்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்பு, பாரம்பரிய இனப்பெருக்க முறைகள் மூலம், உயர்தர தானியங்களை வைத்து, மகசூல் குறையாமல், பிரபலமான அரிசி வகைகளை, சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசிக்கான குறைந்த மற்றும் மிகக் குறைந்த கலோரிகளாக மாற்ற முடியும்.

சம்பா மசூரி x IR36ae இலிருந்து உருவாக்கப்பட்ட அதி-குறைந்த GI அரிசி மாதிரிகள் உலகம் முழுக்க வர உள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு அரிசியை வழங்க IRRI திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில்,53.7 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2045-ல் இந்த எண்ணிக்கை 78.3 கோடியாக உயரும். சர்க்கரைநோய் அதிக எடை மற்றும் மரபியல் போன்ற வாழ்க்கை முறை காரணிகளால் ஏற்படுகிறது. கணையம் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்யத் தவறினால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மேலும் செல்கள் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தும்.

இதையும் படியுங்கள்:
வெள்ளை சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி - எது உடலுக்கு நல்லது? 
Rice Agriculture

கிளைசெமிக் இன்டெக்ஸ் அல்லது GI, ஒரு உணவுப் பொருள் எவ்வளவு விரைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தி நீரிழிவு நோய்க்கு பங்களிக்கும் என்பதை அளவிடும் அளவீடு ஆகும். அத்தகைய சர்க்கரை அளவுகளில் 45 க்கும் குறைவான GI மிகக் குறைவு. ஐஆர்ஆர்ஐ குறைந்த GI கொண்ட அரிசி வகையை உருவாக்கியுள்ளது. வழக்கமான அரிசி வகைகளை குறைந்த அல்லது மிகக் குறைந்த ஜிஐ அரிசியாக மாற்றுவதன் மூலம் இது உருவாக்கப்பட்டது.

ஐஆர்ஆர்ஐ ஏற்கனவே பிலிப்பைன்ஸில் ஐஆர்ஆர்ஐ 125 அரிசியை 55 GI மதிப்பு கொண்டதாகவும் ஐஆர்ஆர்ஐ 147 அரிசி 51 GI அளவு கொண்ட  குறைந்த GI அரிசி வகைகளை வெளியிட்டுள்ளது.

நீரிழிவு மற்றும் நீரிழிவு நோய்க்கு முந்தைய பாடங்களுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமானதாகக் கருதப்படும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு பண்புகளைக் கொண்ட உணவைக் கொண்டு வர முடிந்தால் அது சிறப்பானதாக இருக்கும் ."இது ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், அரிசி உட்கொள்ளும் நாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்," என்று ஐஆர்ஆர்ஐ நுகர்வோர் தலைவர்,டாக்டர் நேஸ் ஸ்ரீனிவாசுலு கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
இவற்றைப் பின்பற்றினால் பசியை எளிதாக கட்டுப்படுத்தலாம்! 
Rice Agriculture

இந்த "ஆராய்ச்சி முன்னேற்றங்கள் பயனளிக்கும். மேலும் மிகப்பெரிய சந்தையையும் உருவாக்கும். குறைந்த மற்றும் மிகக் குறைந்த ஜிஐ அரிசி வகைகளை விரைவாக வெளியிடுவதற்கு, முடிந்தவரை பல நாடுகளின் அமைப்புகளுடன் கூட்டு சேர்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று ஐஆர்ஆர்ஐ இடைக்கால இயக்குநர் ஜெனரல் டாக்டர்.அஜய் கோஹ்லி கூறினார். இந்த அரிசி விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும். அதன்  பின்னர் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக அரிசி சாப்பிட முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com