தமிழ்நாடு ஊராட்சித் துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் வேலை..! 8வது படித்திருந்தால் போதும்..!

Government jobs
TN Government
Published on

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி ஓட்டுநர், பதிவறை எழுத்தர், இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தகுதிகள் நிரண்யிக்கப்பட்டுள்ளன. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த 8வது மற்றும் 10வது தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் இன சுழற்சி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்க கட்டணமாக பொதுப் பிரிவினர் ரூ.100 மற்றும் எஸ்பி/எஸ்டி பிரிவினர் ரூ.50 செலுத்த வேண்டும். கல்வித்தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் விண்ணப்பதாரர்கள், அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

விண்ணப்பிக்கும் தேதி: செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அதோடு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இரவு காவலர் பணிக்கு தமிழ் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.

பதிவறை எழுத்தர் பணிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பணிக்கு 8வது தேர்ச்சியுடன், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்...! 20,000 காலிப் பணியிடங்கள்..! எங்கே எப்போது தெரியுமா.?
Government jobs

வயது வரம்பு:

ஓட்டுநர், இரவு காவலர், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவுக்கு 32 வயது, பிசி/எம்பிசி பிரிவுக்கு 34 வயது, எஸ்பி/எஸ்டி பிரிவுக்கு 37 வயது வரை இருத்தல் வேண்டும். ஓட்டுநர் பதவிக்கு மட்டும் எஸ்சி/எஸ்டி பிரிவினர் 42 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்:

ஓட்டுநர்: ரூ.19,500 - ரூ.71,900

இரவு காவலர்: ரூ.15,700 - ரூ.58,100

அலுவலக உதவியாளர்: ரூ.15,700 - ரூ.58,100

பதிவறை எழுத்தர்: ரூ.15,900 - ரூ.50,400

மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள https://tnrd.tn.gov.in/project/recruitment/Advertisement/advertisement_display.php என்ற இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறையில் முகவர் வேலை..! நேர்முகத் தேர்வு மட்டுமே..! உடனே விண்ணப்பீங்க..!
Government jobs

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com