
இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்கும் வகையில் தமிழக அரசு அவ்வப்போது தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கிட்டத்தட்ட 20,000 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தவறாது வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடலூரில் நடைபெறவிருக்கும் வேலைவாய்ப்பு முகாமை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி கடலூரின் பெண்ணாடம் பகுதியில் உள்ள லோட்டஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் வருகின்ற ஆகஸ்ட் 30 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கத்தில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து கடலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, வேலைக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளன. இதனால் 20,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதற்கான வழிகாட்டுதல்களும் இங்கு அளிக்கப்படும். அதோடு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.
ஆவணங்கள்: சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு.
இடம்: லோட்டஸ் இண்டர்நேஷனல் பள்ளி, பெண்ணாடம், கடலூர்.
தேதி மற்றும் நேரம்: ஆகஸ்ட் 30, சனிக்கிழமை. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தில் தங்களது கல்வித்தகுதி விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 04142-290039 மற்றும் 9499055908 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.