அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! போக்குவரத்து பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வெளியீடு..!

தீபாவளி bonus
தீபாவளி bonus
Published on

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு, 2024-2025-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 175 கோடியே 51 இலட்சம் ரூபாய், இன்று (15.10.2025) 1,05,955 பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,912 பருந்துகள், 10,125 க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள், உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை வழங்குவதன் மூலம் தினசரி 1.97 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
தங்க நகை திருட்டு போயிடுச்சா? கவலைய விடுங்க...இது மட்டும் இருந்தா உடனே பணம் கிடைக்கும்...
தீபாவளி bonus

இதில் 60 சதவீத பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பங்களிப்பு இன்றியமையததாகும். இதனால் தமிழ்நாட்டின் பேருந்து வலையமைப்பு ஒரு முக்கியமான சமூக பாதுகாப்பு வலையமைப்பாக விளங்குகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, போக்குவரத்து தொழிலாளர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,05,955 பணியாளர்களுக்கு, 2024-2025 ஆம் ஆண்டிற்காக வழங்கப்படும் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேற்று (15.10.2025), வழங்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com