தீபாவளி: ரயில் முன்பதிவு... ஐந்தே நிமிடங்களில் காலியான டிக்கெட்!

Train
Train

பொதுவாக தீபாவளிக்கு ரயில் முன்பதிவு செய்ய மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு தேதி அறிவித்துவிடுவார்கள். அந்தவகையில் தற்போது முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஐந்தே நிமிடங்களில் அனைத்தும் காலியாகிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். ஏராளமானோர் பயணம் மேற்கொள்வதால், பேருந்து, ரயில் ஆகியவை நிரம்பி வழியும். ஆகையால், முன்பதிவு செய்யும் நாளை பல நாட்களுக்கு முன்பே அறிவித்துவிடுவார்கள்.

அந்த வகையில் சென்னையில் இருந்து அக்டோபர் 28 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அக்டோபர் 29ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு நேற்றுக் காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய வேகத்திலேயே இந்த டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்தது. தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் ரயில்களின் டிக்கெட் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து காத்திருப்போர் பட்டியல் வந்தது.

அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முன் பதிவு செய்பவர்கள் தீபாவளிக்கு முந்தைய நாள் அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்கு இன்று ரயில் டிக்கெட்டில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. ரயிலில் முன்பதிவு 90 நாட்களுக்கு முன்பு செய்யலாம் என்ற நிலையில் அதற்கு முந்தைய நாள் சொந்த ஊர் செல்பவர்கள் இன்று நேரடியாகவோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி செயலி அல்லது இணையதளம் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் காலியாகிவிடும் என்பதால், உடனே அனைவரும் டிக்கெட் எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது. ஆனால், முன்பதிவு தொடங்கப்பட்ட ஐந்தே நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டதால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையும் படியுங்கள்:
25 இந்திய மீனவர்கள் கைது… இலங்கை ராணுவத்தின் அட்டகாசம்!
Train

கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை, ஆகிய தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் நிறைவடைந்தது. இதையடுத்து தீபாவளிக்கு பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி நெருக்கத்தில் தெற்கு ரயில்வே சார்பில் தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com