தீபாவளிக்கு ரெயிலில் புக்கிங் தொடங்கிடுச்சு... இப்படி செய்தால் ஈஸியா டிக்கெட்டை புக்கிங் செய்யலாம்...!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் இப்படி செய்தால் ஈஸியா டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
Diwali train ticket booking
Diwali train ticket booking
Published on

சென்னை பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கி படிக்கும் அல்லது வேலைக்கு போகும் மக்கள் பண்டிகை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், விடுமுறை நாட்களில் பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இதனை தவிர்க்க சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் முன்கூட்டியே டிக்கெட்டை முன்பதிவு செய்து விடுகின்றனர். இதனால் கடைசி நேர டென்ஷன், கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக, ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது.

அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20-ம்தேதி திங்கட்கிழமை வருவதால், முன்கூட்டியே சொந்த ஊர் செல்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் அக்டோபர் 16-ம்தேதி முதல் 21-ம் தேதி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அதேபோல் தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்ப அக்டோபர் 21-ம்தேதி முதல் 23-ம் தேதி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? 20% தள்ளுபடியுடன் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் தேதி இதோ..!
Diwali train ticket booking

ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், ரெயில் நிலையங்களில் உள்ள ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரெயில் டிக்கெட்டை 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் தீபாவளிக்காக டிக்கெட் முன்பதிவு வரும் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

அக்டோபர் 16-ம் தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் தென் மாவட்டங்களுக்கு புறப்படும் பாண்டியன் விரைவு ரயில் உள்பட முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.

அந்த வகையில் அக்டோபர் 17-ம் தேதிக்கான முன்பதிவை இன்றும்(ஆக 18-ம்தேதி), அக்டோபர் 18-ம் தேதிக்கான முன்பதிவை ஆகஸ்ட் 19-ம்தேதியும் அக்டோபர் 19-ம் தேதிக்கான முன்பதிவு வரும் 20-ம் தேதியும், தீபாவளி நாளான, 20-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவை, வரும், 21-ம் தேதியும் செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 16-ம்தேதிக்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்னையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் மட்டுமே காட்டுகிறது. அக்.17-ம்தேதி முதல் அக்.20-ம்தேதி வரை 5 நாட்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு இன்று (ஆக.18-ம்தேதி) முதல் 21-ம்தேதி வரை நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊரில் இருந்து அக்டோபர் 21-ந்தேதி சென்னை திரும்ப உள்ளவர்கள் வரும் 22-ந்தேதியும், அக்டோபர் 22-ந்தேதி முன்பதிவை வரும் 23-ந்தேதியும், அக்டோபர் 23-ந்தேதிக்கான முன்பதிவை வரும் 24-ந்தேதியும், அக்டோபர் 24-ந்தேதிக்கான முன்பதிவை வரும் 25-ந்தேதியும், அக்டோபர் 25-ந்தேதிக்கான முன்பதிவை வரும் 26-ந்தேதியும், அக்டோபர் 26-ந்தேதி சென்னை திரும்ப உள்ளவர்கள் வரும் 27-ந்தேதியும் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம், அக்டோபர் 16-ம்தேதிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியாதவர்கள் அல்லது எடுக்க தவறியவர்கள் இந்த வழிமுறையை பின்பற்றி இன்று முதல் வரும் 21-ம்தேதி வரை டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

தற்போது நிறைய பேர் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்கின்றனர். தீபாவளி முன்பதிவு 8 மணிக்கு தொடங்கும் நிலையில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பும் நபர்கள் ஐஆர்சிடிசி இணையதளம் சென்று 10 நிமிடம் முன்பாக அதாவது 7.50 மணிக்கே Log in செய்து கொள்வது நல்லது. 10 நிமிடங்கள் முன்பாக நீங்கள் உங்கள் விவரங்களை பதிவு செய்து சரியாக 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் போது நீங்கள் உடனடியாக டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.

அதாவது டிக்கெட், முன்பதிவு தொடங்கும் நேரத்திற்கு முன்பே தயாராக இருப்பதன் மூலம் எந்த பதற்றமும், தடங்கலும் இல்லாமல் முன்பதிவு செய்ய முடியும். அதுமட்டுமின்றி நீங்கள் மட்டும் ஆன்லைனில் டிக்கெட் எடுக்க முயற்சி செய்யாமல் நண்பர்களையும், உறவினர்களையும் இதில் ஈடுபடுத்தினால் விரைவில் உங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளி: ரயில் முன்பதிவு... ஐந்தே நிமிடங்களில் காலியான டிக்கெட்!
Diwali train ticket booking

தீபாவளி ரெயில்களுக்கான முன்பதிவுகளை பொறுத்து, தீபாவளிக்கு 5 நாட்களுக்கு முன்பு அதாவது அக்டோபர் 15-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தொிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com