திமுக தலைவர் பதவி; ஸ்டாலின் நாளை வேட்புமனு தாக்கல்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

 திமுக கட்சியின் தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 -இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப் பட்டதாவது:

 திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, (ஆக்டோபர் 9) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன.

இந்த பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. வேட்புமனுக் கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.

அந்த வகையில் திமுக தலைவர் பதவிக்கு நாளை காலை ஸ்டாலின் முறைப்படி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அவரைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் நாளைய தினம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

 -இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com