#BREAKING : இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் - முதலவர் ஸ்டாலின் அறிவிப்பு..!

STALIN
STALIN
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாட்டில், "வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்க, ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ள அரசு சார்பில் ரூ.8,000 'இல்லத்தரசி கூப்பன்' வழங்கப்படும்.

8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'இல்லத்தரசி கூப்பன்'-ஐ பயன்படுத்தி வீட்டிற்குத் தேவையான வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் பழைய பொருட்களை மாற்றிக் கொள்ளலாம். இவை வருமான வரிச் செலுத்தாத இல்லத்தரசிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.இந்த பொருட்களை அவரவர் வசிக்கும் வீட்டின் அருகே பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com