காங்கிரஸிற்கு 28, மதிமுகவிற்கு 5: திமுக கூட்டணியின் தற்போதைய நிலவரம்..!

dmk-mdmk
dmk-mdmk
Published on

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் திருச்சியில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்திய திமுக, இன்று சூட்டோட சூட்டாக தொகுதி பங்கீடுகளை கூட்டணி கட்சிகளுடன் இறுதி செய்து வருகிறது. மற்ற கூட்டணிகள் இன்னும் தொகுதி பங்கீடுகளை ஆரம்பிக்காத நிலையில், திமுக ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்க வேண்டிய தொகுதிகளை இறுதி செய்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து திமுக தொடர்ச்சியாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக 40க்கும் மேற்பட்ட சீட்டுகளைக் கேட்டும் ஆட்சியில் பங்கு கேட்டும் வந்ததால் , கூட்டணியில் இழுபறி நீடித்தது. திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் ஆட்சியில் பங்கு என்று கோரிக்கையை வைத்துக் கொண்டிருந்தன. ஆயினும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சியில் பங்கு என்பதை உறுதியாக கேட்கவில்லை.

திமுக கூட்டணியில் தேமுதிக வந்த பிறகு ,காங்கிரஸ் கட்சி இறங்கி வந்தது. மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டால், தங்கள் கட்சி பாதிக்கப்படலாம் என்று ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை காங்கிரஸ் கைவிட்டது. அதற்கு பதிலாக திமுக ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தது. மேலும் கடந்த தேர்தலில் ஒதுக்கியதை விட 3 சீட்டுகள் கூடுதலாக , மொத்தம் 28 சட்டமன்ற தொகுதிகளை காங்கிரஸிற்கு வழங்கியுள்ளது.

பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் , திமுகவிற்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வந்துள்ளன. ஆரம்பத்தில் மதிமுக தரப்பில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. ஆயினும் 26 கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி என்பதால் திமுக அவ்வளவு தொகுதிகளை ஒதுக்கவில்லை. 4 தொகுதிகளை மட்டும் ஒதுக்க திமுக முன்வந்தது.

இன்றைய(மார்ச்.10) பேச்சுவார்த்தையில் மதிமுகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன , அதில் 4 இல் வெற்றி பெற்றுள்ளது. இம்முறை கூட்டணி ஹவுஸ்புல் ஆனதால் 1 தொகுதி குறைக்கப்பட்டது. மேலும் மதிமுக போட்டியிடும் 5 இடங்களிலும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் நின்றே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிபிஐஎம் கட்சியும் கலந்து கொண்டது. அந்த கட்சிக்கு 5 தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்க சம்மதம் தெரிவித்த நிலையில் , அந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்துள்ளதால் திமுகவின் தரப்பில் நியாயம் இருந்தாலும் , கடந்த முறை போட்டியிட்ட இடங்களை அதிக இடங்களை பெற நாங்கள் விரும்புகிறோம். நாளை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
திடீரென 'கோயிலுக்குப் போகணும்'னு தோணுதா? பின்னணியில் இருக்கும் ரகசியம் இதோ!
dmk-mdmk

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com