அரசு வழங்கும் புதிய கார்களை திமுக பெறாது: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிவிப்பு!

எம்.எல்.ஏக்களுக்கான அரசு கார் சலுகை: திமுகவின் 59 உறுப்பினர்களும் நிராகரிப்பு - சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்source:twitter
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழக அரசு வழங்கும் புதிய கார்களை திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மாநிலத்தின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் புதிய கார்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுவதால் அரசுக்கு கூடுதல் சுமை தவிர்க்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதிகளுக்கு சென்று களப்பணி ஆற்றுவதற்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை அறிவித்தார். அத்துடன் கார் பராமரிப்பு படியாக ரூபாய் 75,000 -ம், உதவியாளர் படியாக ரூபாய் 25,000 என மொத்தம் ஒரு உறுப்பினருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தில் இதுபோன்ற ஆடம்பர சலுகைகள் தேவையா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் தீவிரமாக எழத் தொடங்கின.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடியிலும் நீதிப் பற்றாக்குறையிலும் தவித்து வருவதாக முதலமைச்சரே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் சலுகை தேவையற்ற ஒன்று என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஏற்கெனவே சொந்தமாக வாகனங்கள் இருப்பதால், இந்த மக்கள் பணத்தை சமூகப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்க தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு நலிவடைந்தவர்களுக்கு மட்டுமே வாகனம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர் மட்டுமல்ல, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஏழ்மையாக இருக்கிறார்கள். விசிகவிலிருந்து பேருந்தில் வரக்கூடிய எம்எல்ஏ உள்ளார். அனைவரும் சமம் என்ற முறையில் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தவெகவில் கார் இருப்பவர்கள் அரசின் காரை ஏற்கப் போவதில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு இரண்டு, மூன்று பங்களா இருக்கிறது. ஆனால் அவர் அரசு பங்களாவில் தான் இருக்கிறார். உங்கள் தேர்தல் பத்திரத்தில் வீடு இல்லை, கார் இல்லை, கையில் ரூபாய் 10,000 தான் இருக்கிறது என சொல்லிவிட்டு ரேஞ்ஜ் ரோவரில் போகிறவர்கள் நாங்கள் இல்லை என்று மறைமுக அட்டாக் செய்தார்.

கார்கள் வைத்துள்ள தவெக எம்எல்ஏக்கள் அரசு கார்களை ஏற்கப் போவதில்லை. அதுதான் எங்கள் நிலைப்பாடும். அரசு அதிகாரிகள் முன்பு அரசு காரில் போனால் ஒரு மரியாதை கிடைக்கும். அதற்காகத் தான் கார் கொடுக்கிறோம் என்று கூறினார். தவெகவில் ஏற்கனவே கார் இருப்பவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். கார் என்பது ஆடம்பரம் இல்லை. மக்களை சந்திப்பதற்கான தேவை என்று தெரிவித்தார்.

தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கார் மிகவும் முக்கியம். இரண்டு முறை எம்எல்ஏ ஆகியும் காரில்லாத உறுப்பினர்கள் பலர் உள்ளார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் யாருக்கு கார் தேவையோ அவர்களுக்கு கார் வழங்கலாம் என்று சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமசந்திரன், கார் இல்லாத உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் கொடுக்கலாம். எங்கள் உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்பதே நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.கார்கள் வைத்துள்ள தவெக எம்எல்ஏக்கள் அரசு கார்களை ஏற்கப் போவதில்லை. அதுதான் எங்கள் நிலைப்பாடும். அரசு அதிகாரிகள் முன்பு அரசு காரில் போனால் ஒரு மரியாதை கிடைக்கும். அதற்காகத் தான் கார் கொடுக்கிறோம் என்று கூறினார். தவெகவில் ஏற்கனவே கார் இருப்பவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். கார் என்பது ஆடம்பரம் இல்லை. மக்களை சந்திப்பதற்கான தேவை என்று தெரிவித்தார்.

தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்ய ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கார் மிகவும் முக்கியம். இரண்டு முறை எம்எல்ஏ ஆகியும் காரில்லாத உறுப்பினர்கள் பலர் உள்ளார்கள். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் யாருக்கு கார் தேவையோ அவர்களுக்கு கார் வழங்கலாம் என்று சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமசந்திரன், கார் இல்லாத உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் கொடுக்கலாம். எங்கள் உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என்பதே நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
ரியோ ராஜின் ராம் அண்ட் லீலா விமர்சனம்: ஏலியன் காதலியும் 6 மணி சஸ்பென்சும் – படம் எப்படி இருக்கு?
உதயநிதி ஸ்டாலின்
logo
Kalki Online
kalkionline.com