#BREAKING : தமிழ்நாட்டின் 8 கோடி மக்களின் குரலாக பேசுகிறேன் - திமுக எம்பி கனிமொழி..!!

Kanimozhi Karunanidhi MP
Kanimozhi Karunanidhi MP
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் தமிழ்நாட்டின் சார்பாக எம்பி கனிமொழி மக்களவையில் தனது கருத்துகளை பதிவு செய்தார்.

அவர் உரையிலிருந்து..

தமிழ்நாட்டின் எட்டு கோடி மக்களின் குரலாக பேசுகிறேன் . தொகுதி மறு வரையறை சட்ட திருத்த மசோதா  கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி.

எம்பிக்களை எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தினால் நாடாளுமன்றத்தில் பேச நேரம் கிடைக்குமா ? கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை தீர்மானிக்கலாமா?

தொகுதி மறு வரையறை மசோதாவில் இருப்பதும் அமைச்சர்  அமித்ஷா கூறுவதும்  ஒன்றாக இல்லை.

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டியது ஏன்? மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவில் அவசரம் ஏன்? மாநில அரசர்களுடன் கலந்த ஆலோசனை நடைபெற்றதா ?

தொகுதி மறு வரையறை இல்லாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவை. தேர்தல் நேரத்தில் பெண்களை அரசியல் கேடயம் போல் பாஜக பயன்படுத்த முயற்சிக்கிறது.

மக்களவைத் தொகுதி 850 ஆவது அதிகரித்தால் குடியரசு தலைவர் தேர்தலில் தென் மாநில வாக்குகளின் மதிப்பு குறைந்து விடும்.

தொகுதி மறு வரையறை மசோதா ஜனநாயகத்திற்கு விரோதமானது தேர்தல் லாபத்திற்காகவே இந்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது .

கூட்டாட்சியின் குரலை நசுக்கும் தொகுதி மறு வரையறை மசோதாவை பெண்களை கேடயமாக வைத்து அரசு தனது திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. உண்மையில் மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் பாஜக அரசுக்கு இல்லை.

மக்களவைத் தொகுதி 850 ஆவது அதிகாரத்தால் வட மாநிலங்களுக்கு 420 இடங்கள் கூடிவிடும். தொகுதி மறுவரையால் தென் மாநிலங்களுக்கு தான் பாதிப்பு . தென் மாநிலங்களுக்கு உரிமை மறுக்கப்படும்

அவசரகதியின் தொகுதி மறுவரை மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதினார் .

அரசியல் சாசனத்தை பாதுகாக்கவே நாங்கள் கருப்பு உடையுடன் வந்துள்ளோம் .

தற்போதைய 543 தொகுதிகள் அடிப்படையில் உடனடியாக மகளிர் காணும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

எம் பி கனிமொழியின் கருத்துகளை  கரகோஷம் எழுப்பி ஆதரித்தனர் தமிழக மற்றும் தென்னிந்திய எம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
Mr. X திரைப்பட விமர்சனம்!
Kanimozhi Karunanidhi MP
logo
Kalki Online
kalkionline.com