திமுக முப்பெரும் விழா; விருதுநகரில் கோலாகலம்!

திமுக முப்பெரும் விழா; விருதுநகரில் கோலாகலம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

திமுக சார்பில் இன்று விருதுநகரில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. தந்தை பெரியார் பிறந்த நாள், அறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் திமுக பிறந்த மாதம் உள்ளிட்ட மூன்று விழாக்களையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடுகிறது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:

திமுக விருதுநகரில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவுக்கு தொண்டர்கள் அனைவரும் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-இவ்வாறு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி இன்று விருதுநகரில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com