

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக தோல்வி அடைந்து எதிர்க்கட்சி வசையில அமைந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஸ்டாலினை ஆளும் கட்சியினர் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கடுமையான கோபத்தில் இருக்கும் திமுகவினர், ஏதேனும் செய்து தங்களை மீண்டும் லைம் லைட்டிற்கு கொண்டு வருவதற்காக முயற்சி செய்து வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் திமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளதால் , இப்போதே நாடு முழுவதும் தங்களது பெயரை முன்னிறுத்த 3 ஆம் அணி அமைப்பதில் தீவிரமாக உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததும், முதல் கட்டமாக அந்த கூட்டணியை விட்டு காங்கிரஸ் கட்சி வெளியேறியது.
தற்போது தமிழக அளவில் தவெக கட்சிக் கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இருக்கிறது. திமுக கூட்டணியில் தேமுதிக மட்டுமே உள்ளது . இந்த சூழலில் பாராளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கு ஏதேனும் ஒரு தேசிய கட்சி கூட்டணி அவசியம் தேவை என்ற நிலையில் உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான சூழ்நிலையில் திமுக இல்லை.
காங்கிரஸ் கட்சி இண்டியா கூட்டணியில் திமுகவை இணையச் சொல்லி கருத்துக்களை தெரிவித்தாலும் , தவெக - திமுக என்று இரு பெரிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது சாத்தியப்படாது. காங்கிரஸ் கட்சியை பழி வாங்குவதற்காக திமுக, பாஜகவின் பக்கம் செல்வதற்கு பெரிய அளவில் முயற்சிகளை முன்னெடுத்தது. இதற்கு ஆரம்ப காலகட்டத்தில் பாஜகவில் இருந்து ஆதரவுகள் கிடைத்தாலும், அதன் தாய் கழகமான ஆர்எஸ்எஸ்லிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
ஒரு கட்டத்தில் பாஜகவில் இருந்து சாதகமான தகவல்கள் வராததால், திமுக மூன்றாவது அணியை அமைக்க தேசிய அளவில் முயன்று வருகிறது. இந்த அணியின் முக்கிய நோக்கமே , தேசிய அளவில் கவனம் பெற வேண்டும் என்பது தான். மேலும் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் வழக்குகள் தூசு தட்டப்படுவதால் பாதுகாப்பு வேண்டும் என்று நினைக்கிறது.
தற்போது சமூக வலைதளங்களில் முதல்வர் விஜய் அடுத்த பிரதமர் என்று தவெகவினர் முன்னிறுத்துவதை திமுகவினர் விரும்பவில்லை. அதே நேரம் மூன்றாவது அணி அமைந்து விட்டால், ஸ்டாலின் தான் அடுத்த பிரதமர் என்று விளம்பரப்படுத்தினால், தங்களது கட்சியினர் ஊக்கம் பெறுவார்கள் என்று திமுக நினைக்கின்றது
பாராளுமன்ற தேர்தல் களத்தில் அவ்வப்போது மூன்றாவது அணி அமைவது இயல்பான ஒரு விஷயம் தான். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியடைந்த கூட்டணி கட்சிகள் இந்த அணியினை உருவாக்குகிறார்கள். ராகுலை பிரதமராக முன்னிறுத்தவதை மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், போன்றவர்கள் ஏற்பதில்லை.
தற்போது திமுக மகளிர் அணி தலைவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி, பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து 3 அணி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே , மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் , அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களை சந்திக்க உள்ளார்.