விஜய் அரசுக்கு திமுக ஆதரவா? ஸ்டாலின் கொடுத்த 6 மாத கால அவகாசமும், பின்னணியும்!

stalin vijay
stalin vijay
Updated on

"புதிய அரசுக்கு இடையூறு தராமல் ஆறு மாதங்களுக்கு பொறுமை காப்போம்.. திமுக அரசின் திட்டங்கள் தொடர வேண்டும். பெண்களுக்கு ரூபாய் 2500 வழங்க முடியாவிட்டாலும் ரூபாய் 1000 தொடர்ந்து வழங்க வேண்டும்" என தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் ஒரு ஆங்கில இதழுக்கு தந்த பேட்டியில் வலியுறுத்தி உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகள் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது தவெக கட்சி. தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசத்துடன் எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டும் நிலையில் தற்போது அரசியல் களம் வெகுபரபரப்பாக இயங்கி வருகிறது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஐந்து தொகுதிகளில் ஜெயித்து தற்போது பத்தாண்டுகளாக இருந்த திமுகவின் உறவை முறித்து தவெக பக்கம் சாய்ந்தது அதிரடியாக பார்க்கப்பட்டது. ஒரு பக்கம் தவெகவின் எம்எல்ஏக்கள் ஆதரவு குறித்தும், பிற கட்சிகள் தவெகவில் இணையுமா என்பது பற்றியும் பல யூகங்களும் தலைவர்கள் மீதான விமர்சனங்களும் சமூக வலைத்தளங்கள் எங்கும் வலம் வந்தபடி உள்ளது.

இடையில் 108 இடங்கள் இருந்து தற்போது 113 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சி கோர அனுமதி கேட்டும் இன்னும் ஆளுநர் தவெக கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்க இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக அதிமுகவுடன் இணைந்து புது ஆட்சி அமைக்கும் என்றெல்லாம் பல புரளிகள் வலம் வந்தபடி உள்ளது. அதற்கான பதிலை அதிமுக அது வெறும் வதந்திதான் என்று தங்கள் சார்பில் விளக்கம் தந்து அறிக்கை விட்டது.

இந்த நிலையில் அடுத்து என்ன நிகழும் என்று அரசியல் ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் வரை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் சூழலில் தனது சொந்த தொகுதியான குளத்தூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாலும் 'இது மக்களின் தீர்ப்பு' என மனதார தோல்வியை ஏற்றுக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஆன மு க ஸ்டாலின் சமீபத்தில் கொளத்தூர் மக்களுக்கு மக்கள் நன்றி சொன்ன காட்சிகள் வைரலாகியது .

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் மு க ஸ்டாலின் அவர்களுக்கு ஸ்டாலினுக்கு ஆறுதல் சொன்ன காட்சிகளும் அரங்கேறியது ஒரு புறம் விஜய்க்கு குவியும் வாழ்த்துக்கள் மறுபுறம் புதிய ஆட்சியை ஏற்கும் மனநிலையில் உள்ள மக்கள் , முந்தைய ஆட்சி தந்த நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்கும் மீண்டும் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ள பெண்கள், விஜய்க்கு வாக்களித்த இளைய தலைமுறையினர் வரவேற்பு என தமிழ்நாடு எங்கும் அரசியல் சுறுசுறுப்பை காண முடிகிறது.

இந்நிலையில் தான் தவெக அரசுக்கு எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தில் அமர போகும் திமுக தலைவர் "இன்னும் ஆறு மாதங்களுக்கு தவெக கட்சிக்கு இடையூறாக இருக்க மாட்டோம்" என்று கூறியிருப்பது மக்களால் கவனிக்கப்படும் விஷயமாகியுள்ளது.

திமுக தந்த நலத்திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில் ஸ்டாலின் கூறியிருப்பது தவெக கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற முந்தைய அரசு ஆறு மாதங்கள் கெடு விடுத்திருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! தொடர் உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி.!
stalin vijay
logo
Kalki Online
kalkionline.com