புத்தாண்டை மற்ற நாடுகள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

புத்தாண்டை மற்ற நாடுகள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

புதிய வருடத்தில் வாழ்க்கைத் தரம் மேலும் உயரும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் புதிய வருடத்தை வரவேற்கிறார்கள். பல நாடுகளின் புத்தாண்டு கொண்டாட்டம் அந்த நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம்  ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. சுவாரஸ்யமான இந்த மரபுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

  • ஷ்யாவில் புத்தாண்டு தினத்தன்று மக்கள் புதிய வருடத்திற்கான தங்களின் எதிர்பார்ப்புகளை காகிதத்தில் எழுதி எரித்து, சாம்பலை ஒயின் திரவத்தில்  கலந்து குடிப்பார்கள். இது இலக்கை அடைய தூண்டு கோலாக இருக்கும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.

  • கொலம்பியாவில் மூன்று உருளைக்கிழங்கு எடுத்து, முழுவதும் உரித்தது, உரிக்காதது, பாதி உரித்தது, என்று தங்களுடைய கட்டிலின் கீழே புது வருட முந்தைய இரவில் வைப்பார்கள். இவை முறையே நிதி பற்றாக்குறை, அதிகமான நிதி, வளர்ச்சி மற்றும் பற்றாக்குறைக்கும் இடையேயான நிலையைக் குறிக்கிறது. இரவில் கண் மூடியநிலையில் எந்த உருளைக்கிழங்கை கையிலெடுக்கிறாரோ அது அவருடைய புது வருட நிலையாகும்.

  • ராகுவே, பனாமா, மற்றும் ஈக்வேடார் நாடுகளில் மக்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் உருவ பொம்மையை எரிப்பார்கள். இது முந்திய ஆண்டின் எதிர்மறைச் சிந்தனைகளை அகற்றும் என்று நம்புகிறார்கள். சிலர் பணத்தை வீட்டின் வெளிச் சுவரில் ஒளித்து வைப்பார்கள். இப்படிச் செய்தால் வருகின்ற வருடத்தில் செல்வந்தனாக ஆகலாம்.

  • மெக்ஸிகோவில் புது வருடத்திற்கு தங்கள் வீடுகளைப் புதிய வண்ணத்தில் புதுப்பித்துக் கொள்வார்கள். வீட்டில் சிவப்பு வண்ணம், அன்பு மற்றும் காதலைக் குறிக்கிறது. மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருந்தால் புது வேலை தேடுவதை உணர்த்துகிறது. 

  • பிலிப்பைன்ஸ் மக்கள் புத்தாண்டன்று புள்ளி போட்ட ஆடைகளை அணிந்து கொள்வார்கள். உடைகளில் காசு வைத்துக் கொள்வார்கள். வட்ட வடிவமான பொருட்கள் செழிப்பைக் குறிப்பன. ஆகவே, புத்தாண்டு தினத்தன்று ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி போன்ற வட்ட வடிவப் பழங்களைப் புசிப்பார்கள்.

  • டென்மார்க்கில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களின் கதவுகளில் பழைய தட்டுகள், கண்ணாடி டம்ப்ளர்கள் ஆகியவற்றை வீசி எறிந்து புது வருடத்தை வரவேற்கிறார்கள். ஒருவர் வீட்டு வாசலில் குவிந்து கிடக்கும் உடைந்த பழைய பொருட்கள் அளவைக் கொண்டு வரும் வருடத்தின் நன்மைகள் இருக்கும் என்பது நம்பிக்கை. நாற்காலி, மேஜை போன்ற உயரமானப் பொருட்களின் மீது நின்று கொண்டு சரியாக இரவு பன்னிரண்டு மணிக்கு கீழே குதிப்பார்கள்.

  • யர்லாந்தில் தங்கள் வீட்டுச் சுவர்களை கிறிஸ்துமஸ் ரொட்டியால் தட்டுவார்கள். அப்படிச் செய்வதால், கெட்ட ஆவிகள் வீட்டை விட்டு வெளியேறி, துன்பங்கள் விலகி, புது வருடம் மங்களகரமாகத் துவங்கும் என்று நம்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
2024 புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு எது தெரியுமா?
புத்தாண்டை மற்ற நாடுகள் எவ்வாறு கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
  • ஜெர்மனியர்கள் ஈயத்தை உருக்கி துண்டுகளைத் தண்ணீரில் வீசுவார்கள். குளிர்ச்சியினால் ஈயத் துண்டுகள் எடுக்கின்ற வடிவம் வருகின்ற வருடம் எப்படியிருக்கும் என்று உணர்த்தும்.

  • ஸ்பெயினில் முதல் நாள் இரவு மணி பன்னிரெண்டு அடிக்கும் சமயத்தில் ஒவ்வொரு மணிக்கும் ஒரு திராட்சைப் பழம் என்று பன்னிரெண்டு பழங்கள் சாப்பிடுவார்கள். இதனால் புது வருடத்தில் நன்மைகள் விளையும் என்று நம்புகிறார்கள்.

  • துருக்கியில் கடிகாரம் 12 மணி அடித்தவுடன், புதிய வருடத்தில் செல்வச் செழிப்பு மற்றும் அமைதியான வாழ்க்கை வேண்டி, வீட்டுக் கதவில் உப்பைத் தூவுவார்கள்.

  • பிரேசில் மற்றும் சில தென் அமெரிக்க நாடுகளில், புது வருடத்தன்று, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டம் வரும் என்று வெவ்வேறு வண்ண உள்ளாடைகளை அணிவார்கள்.  சிவப்பு வண்ணம் உள்ளாடை அணிவது காதலையும், மஞ்சள் உள்ளாடை பணத்தையும் புது வருடத்தில் கொண்டு வரும்.

  • கிரீஸ் நாட்டு மக்கள் புது வருடத்தின் முந்திய நாள் இரவில், வீட்டின் வாசலில் வெங்காயத்தை தொங்க விட்டு வைப்பார்கள். வெங்காயம் புது பிறப்பை குறிப்பதாக நம்பிக்கை. புது வருடம் காலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தலையில் வெங்காயத்தால் தட்டி எழுப்புவார்கள்.  கிரீஸ் நாட்டின் சில பகுதிகளில் “வாசிலோபிடா” என்ற கேக் சாப்பிடுவார்கள். அந்த கேக்கின் உள்ளே காசை ஒளித்து வைத்திருப்பார்கள். யாரிடம் அந்த காசு கிடைக்கிறதோ, அந்த நபருக்கு புது வருடம் சிறப்பாக அமையும். புது வருடத்தன்று கேக்கை சிலுவை வடிவில் மூன்று முறை வெட்டும் பழக்கமும் உண்டு.

  • கியூபாவில், ஊர் சுற்றும் ஆசை உள்ளவர்கள், காலியான பயணப் பெட்டியை கையிலெடுத்துக் கொண்டு நள்ளிரவில் அவர்கள் வீட்டைச் சுற்றி நடப்பார்கள். அப்படி செய்வதால், அடுத்த வருடம் பயணம் செய்யும் வாய்ப்பு அமையும்..   

  • ப்பான் நாட்டில் புது வருடம் பிறக்கும் போது, கோவில் மணிகள் 108 முறை தொடர்ந்து ஒலிக்கும். அப்படிச் செய்வதனால், உலக வாழ்க்கையில் பற்று கொண்டு, அதனால் மனதில் ஏற்படுகின்ற 108 ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் மனதை விட்டு அலகி, நிச்சலமான மனதில் புதிய ஆண்டை தொடங்க வழி பிறக்கும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com