2024 புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு எது தெரியுமா?

2024 புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு எது தெரியுமா?
Published on

2023ம் ஆண்டின் இறுதி நாட்களை நெறுங்கிவிட்டோம். 2023 டிசம்பர் 31ம் தேதி ஆங்கில புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிவருகிறார்கள். பொதுவாக, பூமிப்பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, இன்னொரு முனையில் இரவாக இருக்கும். அதை வைத்து பார்த்தால் சில இடங்களில் புத்தாண்டு பிறந்து பல நேரம் கழித்து தான் வேறு இடங்களில் புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில், புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு, கடைசியாக வரவேற்கும் நாடு எவை என்பதை பார்ப்போம்..!

புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு

பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகள்தான் முதன்முதலாக 2024ம் புத்தாண்டு பிறப்பை கொண்டாடுகிறது. அதாவது இந்திய நேரப்படி டிசம்பர் 31-ம் தேதி 2023ம் ஆண்டு பிற்பகல் 3.30 மணி என்பது. இவர்களுக்கு சரியாக அதிகாலை 12 மணி ஆகிவிடும். புத்தாண்டையும் வரவேற்க தயாராகிவிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
அரசியல் கணிப்பில் கெட்டிக்காரர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!
2024 புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு எது தெரியுமா?

உலகிலேயே முதல் முதலாக புத்தாண்டு இவர்களுக்கு பிறப்பதால், எப்போதுமே சற்று ஆடம்பரமாகவே கொண்டாடுவார்கள். லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களை கட்டும். இதேபோல் இந்திய நேரப்படி டிசம்பர் 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நியூசிலாந்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும்.

புத்தாண்டை இறுதியில் கொண்டாடும் தீவு

ஜனவரி 1, மாலை 5.50 மணிக்கு பேக்கர் தீவு புத்தாண்டை கொண்டாடுகிறது. இது தான் புத்தாண்டு பிறக்கும் கடைசி தீவு நாடாகும். ஆக, ஒருநாள் முன்னதாக மாலை நேரத்தில் துவங்கும் புத்தாண்டானது, மறுநாள் மாலை வரை ஒவ்வொரு உலக நாடுகளும் கொண்டாடி மகிழ்கிறது.

-NITHISH KUMAR YAZHI

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com