
உலகத்திலேயே அதிக விலை உயர்ந்தது தங்கம் என்று தான் எண்ணுவீர்கள். அதைவிட உயர்ந்தது ப்ளாடினம் என்று நினைக்கிறீர்களா? உண்மையில் ரோடியம் எனப்படும் உலோகம் தான் உலகிலேயே மிக விலையுயர்ந்த உலோகமாகும். இது காருக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. 2025-ம் ஆண்டில் உலகிலேயே மிக விலை உயர்ந்தது ரோடியம் தான். ஒரு அவுன்ஸ் ரோடியத்தின் விலை 4500 டாலர்களாகும்
மற்ற உலோக விலை விவரம்
தங்கம் ஒரு அவுன்ஸ் - 2300 டாலர்கள்
பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் - 950 டாலர்கள்
பலேடியம் ஒரு அவுன்ஸ் - 1250 டாலர்கள்.
எதனால் ரோடியம் விலை அதிகம்
இது பளபளப்பான வெள்ளி உலோகம் போல் காணப்படும். இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் கூடிய பண்பை பெற்றது. நாம் பயன்படுத்தும் கார்களில் உள்ள Exhaust systemல் பயன்படுத்தப்பட்டு நைட்ரஜன் ஆக்சைடை சுத்தமான நைட்ரஜன் மற்றும் ஆவியாக மாற்ற உதவுகிறது.
இந்த உலோகம் அரிதாகவே கிடைப்பதாலும் மேலும் இது தங்கத்தை விட 100 மடங்கு அதிகமாகவும் இருப்பதால் இதன் விலை அடிக்கடி உயர்ந்து விடுகிறது. சுற்றுச்சூழலைக் காக்கும் உலோகம் இது.
சுமார் 80 சதவீதம் ரோடியம் தெற்கு ஆப்ரிக்காவில் காணப்படுகிறது. மேலும் சிறிய அளவில் ரஷ்யா, கனடா மற்றும் ஜிம்பாவேயிலும் காணப்படுகிறது. உலகில் அரசியல் பொருளாதார மாற்றத்திற்கு ஏற்றபடி இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ரோடியத்தைப் போல் விலை உயர்ந்த உலோகங்களும் உள்ளன. அவை என்னவென்று தெரியுமா?
இரிடியம்
மின்சாரத்தில் பயன்படுத்தும் இதன் விலை ஒரு அவுன்ஸ் 4000 டாலர்கள் ஆகும்
ஆஸ்மியம்
அறுவை சிகிச்சை சாதனங்களிலும், ஃபௌண்டன் பேனாக்களிலும் பயன்படுத்தப்படும் இது ஒரு அவுன்ஸ் 1200 டாலர்கள் விலைமதிப்பாகும்.
பலேடியம்
எலக்ட்ரானிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் உலோகம்.
ரோடியத்தை வெள்ளைத் தங்கம் என்றும் கூறுவார்கள். இது 1803-ம் ஆண்டில் வில்லியம் ஹைட் ஹொலாஸ்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சோடியம் பிளேடிங் நகைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. ரோடியம் நகைகள் மற்ற உலோகம் போல் அல்லாமல் வெகு நாட்கள் பாதிப்பில்லாமல் இருக்கும். தேய்தல் பளபளப்பு குறைதல் பிரச்னைகள் இருக்காது. ரோடியம் ப்ளேடிங் கொண்டு செய்யப்படும் நகைகள் மிக பளபளப்பாக இருக்கும். ஆனால் ரோடியத்தின் விலை தங்கத்தை விட 100 மடங்கு அதிகம். பழைய நகைகளை சோடியம் ப்ளேடிங் கொண்டு புதுப்பிக்க அவை நல்ல பளபளப்பு பெறும் என்று தெரிகிறது.