ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழா மற்றும் பட வெளியீடு எப்போது தெரியுமா?

ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழா மற்றும் பட வெளியீடு எப்போது தெரியுமா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர். இப்படத்தின் first single மற்றும் இசை வெளியீடு பற்றின தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நடித்துள்ள மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பான்-இந்திய நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொள்வார்கள். ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மற்றும் முதல் சிங்கிள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெயிலர்’ திரைப்படம் சுதந்திர தின வார இறுதி நாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் அறிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com