தீபாவளியை முன்னிட்டு விற்பனைக்கு வந்த ‘9 காரட் தங்கம்’... எங்கு வாங்கலாம் தெரியுமா..?

தீபாவளியை முன்னிட்டு ‘9 காரட் தங்க’ நகைகள் சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் விற்பனை வந்துள்ளது.
9 carat gold
9 carat gold
Published on

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக, இந்தியா மீது அமெரிக்கா அதிக வரிகளை விதித்ததன் மூலம் தங்கக்கட்டிகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. இதனாலும் தங்கத்தின் விலை அதிகமாகி, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனும் மந்தமடைந்துள்ளது. உலகில் அதிக தங்கத்தை வாங்கும் நாடு என்றால் இந்தியாதான். அப்படியிருக்க, கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தியாவின் தங்க விற்பனையில் 60 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதன் மூலம் இந்த பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொள்ள முடியும். இந்த தொடர் விலை ஏற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான். எனவே, பொதுமக்களை தங்கம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ஹால்மார்க் தரநிலைகளில், 9 காரட் தங்கத்திற்கு ஒப்புதல் அளித்தையடுத்து, (BIS) ஹால்மார்க்கிங் அமைப்பின் 9 காரட் (9 கே) தங்கமும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக ஹால்மார்க் தூய்மைகளில் 14கே, 18கே, 20கே, 22கே, 23கே, 24கே உள்ளிட்டவை உடன் தற்போது 9கே சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
‘வந்தாச்சு 9 காரட் தங்கம்’...பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்...விலை எவ்வளவு தெரியுமா?
9 carat gold

24 காரட் தங்கம் என்பது வேறு எந்த உலோகங்களும் சேர்க்காத 99.9 தூய்மையான தங்கம். அதேநேரத்தில், 9 காரட் தங்கம் என்பது 37.5 சதவீதம் மட்டும் தூய்மையான தங்கமாக இருக்கும். இதில் உள்ள 24 பங்கில் 9 பங்கு மட்டுமே தங்கம் இருக்கும். மீதம் உள்ள 62.5 சதவீதம் என்பது செம்பு, வெள்ளி, துத்தநாகம் என அலாய் உலோகங்கள் மட்டுமே இருக்கும்.

24 காரட் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இளம் முதலீட்டாளர்கள் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் 9 காரட் தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் காட்டுகின்றனர். ஏனெனில் இதன் விலை குறைவு என்பதால் குறைவான பட்ஜெட்டுடன் தங்கம் வாங்க நினைப்பவர்கள் இதையே வாங்குகிறார்கள். மேலும், 9 காரட் தங்கம் விலை மலிவு என்பதால் திருட்டு பயம் குறைவு. எனவே பாதுகாப்பான முதலீடாகவும் இது அமைகிறது.

24 காரட், 22 காரட் தங்க நகைகளை விட, 9 காரட் நகைகளில் கொஞ்சம் தங்க நிற பிரகாசம் குறைவாக இருக்கும். குறிப்பாக, ரோஸ் கோல்ட் நிறத்தில் காட்சியளிக்கும்.

நேற்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,580க்கும், ஒரு சவரன் ரூ.92,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதுவே,9 காரட் தங்கம் தோராயமாக ஒரு கிராம் ரூ.4,299க்கும் 10 கிராம் ரூ.42,299 ஆயித்துக்கும் விற்பனையாகிறது. வரும் 20-ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சரியான சமயத்தில் இந்திய அரசு 9 காரட் தங்கத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் மத்தியில் நிலவும் தங்கத்தின் மீதான மோகத்தை கட்டுப்படுத்த இது உதவும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னையில் பல கடைகளில் 9 காரட் தங்கம் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடைகளில் 9 காரட் தங்கம் விற்பனைக்கு வந்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுவும் தீபாவளி போனஸ் கிடைத்தவர்கள் ஆவலுடன் 9 காரட் தங்கத்தை போட்டிபோட்டு வாங்கி வருகின்றனர்.

குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பெண்களும், வேலைக்கு செல்லும் பெண்களும் 9 காரட் தங்கத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபல நகைக்கடைகளில் 9 காரட் தங்க நகைப்பகுதிகளில் தான் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுவதாக நகைக்கடை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வாங்க தெரிஞ்சிக்கலாம்..! 9 காரட் நகைகளை மறுவிற்பனை செய்ய முடியுமா?
9 carat gold

தினமும் 9 காரட் தங்கத்தை வாங்கும் மக்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் இனிவரும் காலங்களில் 22, 24 காரட்டை தங்க நகைகளை விட 9 காரட் தங்க நகை விற்பனை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com