ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா?

First stethoscope
First stethoscope
Published on

இதயத்துடிப்பை அறிய மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பை பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள். அந்தவகையில் அதனை யார் கண்டுபிடித்தார்கள்? எதற்கு கண்டுபிடித்தார்கள்? என்று பார்ப்போமா?

பொதுவாக அந்தக் காலத்தில் என்னத்தான் சிலர் மருத்துவராக இருந்தாலும், பெண்களைத் தொடவே கூச்சப்படுவர். அப்படி பெண்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ஸ்டெதாஸ்கோப். ரீனே என்ற மருத்துவரிடம் ஒரு பெண் இதயம் தொடர்பான பிரச்சனைக்காக வந்திருக்கிறார். அதற்கு இதயத்துடிப்பை பரிசோதிக்க வேண்டுமல்லவா? ஆகையால் ரீனே அந்த பெண்ணின் மார்பகத்தை ஓட்டி காதை வைத்து கேட்க முற்பட்டார். ஆனால், அவரின் கூச்சம் அவரை அப்படி செய்ய விடவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு அப்போது இதயத்துடிப்பை கேட்டார்.

ஆனால், ரீனே இதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் என்று எண்ணினார். அப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஸ்டெதாஸ்கோப்.

முதலில் அவர் ஒரு தாளை சுருட்டி ஒரு பக்கத்தை நோயாளியின் இதயத்திலும், மறுபக்கத்தை அவரின் காதிலும் வைத்துக் கேட்டார். இதன்மூலம் அவரால் நோயாளின் இதயத்துடிப்பை உணர முடிந்தது.

ஒருமுறை சிறுவர்கள் ஒரு விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கும்போது மரக்குழாய் செய்து அதில் ஓட்டைப் போட்டு விளையாடினர். இதனைப் பார்த்த ரீனே நமக்கு இது தோன்றவில்லையே என்று, மரத்தை வைத்து ஒரு புதுவிதமான ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்தார். இதனை நோயாளிகளிடையே சோதித்துப் பார்த்தார். ஒரு முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து, மறு முனையை தன் காதில் வைத்து அவருடைய இதயமும், நுரையீரல்களும் எழுப்பிக் கொண்டிருந்த ஒலிகளைக் கேட்டார்.  முன்பைவிட இது நன்றாக கேட்டது. அந்தவகையில் ரீனே மரத்தால் ஆன ஸ்டெதாஸ்கோப்பை 1816ம் ஆண்டு உருவாக்கினார்.

இந்த ஸ்டெதாஸ்கோப்பின் பரிணாம வளர்ச்சியே இப்போது டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப்பாகும். மருத்துவர்களின் அடையாளமான ஸ்டெதாஸ்கோப் இப்படிதான் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின்னர்தான் 1851ம் ஆண்டு ஐயர்லாந்து மருத்துவர் ஆர்தர் லியார்ட் என்பவர் பிளாஸ்ட்டிக் பயன்படுத்தி ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்தார். அதே ஆண்டு அமெரிக்காவில் ஒரு மருத்துவர் இயர்பீஸைச் சேர்ப்பதன் மூலம் பைனரல் ஸ்டெதாஸ்கோப்பை உருவாக்கினார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் வேட்டையன்: 'குறி வெச்சா இரை விழணும்' - சிறு குறைகள் இருந்தாலும் வச்ச குறி தப்பல!
First stethoscope

1945ல் ஒரு புதுவகையான ஸ்டெதாஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பக்கம் சுவாச அமைப்புக்காகவும், மற்றொன்று இருதய அமைப்புக்காகவும் என இரண்டு பக்க Chestpiece-ஐ இணைத்த இதில் ஒன்று இதயத்தையும் மற்றொன்று நுரையீரலையும் சோதிக்கப் பயன்பட்டது. 

1970களில் உள் உடல் செயல்பாடுகளின் ஒலியை அதிகரிக்க மின்னணு பெருக்கத்தைப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் ஸ்டெதாஸ்கோப்புகள் வெளிவரத் தொடங்கின.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவானதுதான் இப்போது டாக்டர்கள் பயன்படுத்தும் ஸ்டெதாஸ்கோப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com