டாடா டெக்னாலஜீஸ் COO-வான சுகன்யா சதாசிவன் யார் தெரியுமா?

Suganya sadhasivan
Suganya sadhasivan

டாடா டெக்னாலஜீஸில் மூத்தத் துணைத் தலைவராகப் பல ஆண்டு காலம் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த சுகன்யா சதாசிவன் வியாழன்கிழமை அன்று டாடா டெக்னாலஜீஸின் COO வாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இவர் யார் என்பதைப் பார்ப்போம்.

சுகன்யா சதாசிவன் தமிழ்நாட்டில் பிறந்து பாரதியார் பல்கலைகழகத்தில்தான் தனது கம்ப்யூட்டர் மற்றும் இன்ஃபர்மேட்டிக்ஸ் பிரிவில் இளங்கலைப் படிப்பை முடித்தார். பின்னர் ஐடி துறையில் 33 வருடங்கள் பணியாற்றி வந்தார். ஐடி துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இவர் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் மூத்த துணை தலைவராகவும், தலைமை தகவல் அதிகாரியாகவும் பணி நியமனம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில்தான் அவர் கடந்த வியாழக்கிழமை அன்று டாடா டெக்னாலஜீஸின் உயரிய பதவியான COO-வாகப் பணி நியமனம் செய்யப்பட்டார். முதன்முறையாக டாடா நிறுவனத்தில் உயரிய பதவியில் தமிழகத்திலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை இவரையே சாரும்.

இதுதொடர்பாக டாடா டெக்னாலஜீஸ் சி.இ.ஒ மற்றும் மேனேஜிங் டேரக்டர் கூறியதாவது, “சுகன்யாவின் அனுபவமும் அவரின் திறமையும் எங்கள் நிறுவனம் வளர்ச்சி அடைவதற்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். அவருடைய வழிக்காட்டுதல் மூலம் எங்கள் நிறுவனம் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்பதை நம்புகிறேன். அதேபோல் உலக நிறுவனங்களுடன் உறவு வைத்துக்கொள்ள சுகன்யாவின் வழிக்காட்டுதல் நிறுவனத்திற்கு மிகவும் தேவை.” இவ்வாறு அவர் கூறினார்.

இந்த COO பதவியின் மூலம் சுகன்யா டெலிவரி மற்றும் ஆப்ரேஷன்ஸ் செயல்பாடுகளை வலுப்படுத்த நிறுவனத்திற்கு உதவி செய்வார். அதேபோல் உள் டிஜிட்டல் மற்றும் ஐடி அமைப்புகளுடன் சேர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கு உதவி செய்வார்.

மேலும் சுகன்யா HR மற்றும் Resource Management Group ஆகியோருடன் இணைந்து நிறுவனத்தை வழி நடத்துவார். அதேபோல் டிஜிட்டல் தகவல்களை பரிமாறவும் உதவி செய்வார். அந்தவகையில் புனேவில் உள்ள CEO மற்றும் MD ஆகியோருக்கு நிறுவனத்தின் நிலை மற்றும் வளர்ச்சிகள் தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பார்.

இதையும் படியுங்கள்:
இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Suganya sadhasivan

டாடா நிறுவனத்தின் மதிப்பு 42, 411 கோடி ஆகும். அவ்வளவு பெரிய மதிப்புடைய நிறுவனத்திற்கு முதன்மை அலுவலராக ஒரு தமிழ்ப் பெண் நியமனமானது ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் பெருமையடையச் செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com