விஜய்
விஜய்

வாரிசு படத்தினை முதன் முதலில் விமர்சனம் செய்தது யார் தெரியுமா?

முதன் முதலில் ஓவர்சீஸ் சென்சார் போர்டின் உறுப்பினரான உமர் சந்த் என்பவர் வாரிசு படத்தை பார்த்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள வாரிசு படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார், தில் ராஜூ தயாரித்துள்ளார்.அத்தோடு இந்தப் படத்தின் மொத்தபட்ஜெட் 200 கோடி ரூபாய் என கூறப்படுகின்றது. மேலும் இதில் விஜய்க்குமட்டுமே பல கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதே first reviewபோல் ராஷ்மிகா மந்தனாவுக்கு கோடிகளில் சம்பளம்கொடுக்கப்பட்டுள்ளதாம். இவர்கள் இருவரையும் தவிர மற்ற நடிகர்கள், நடிகைகளின் சம்பள விவரங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

varisu movie
varisu movie

உமர் சந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் " நடிகர் விஜய் நடிப்பு, மேனரிஸம் மற்றும் வசனங்களுடன் தான் ஒரு மிருகம் என்பதை நிரூபித்துள்ளார். இந்த ஃபேமிலி டிராமாவில் அவர் பலவிதமான உணர்ச்சிகளை காட்டியுள்ளார். அவரிடமிருந்து இதுபோன்ற பொழுதுபோக்குகளைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எளிமையான கன்டென்ட் மற்றும் இதயத்தைத் தொடும் உணர்வுகள் என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வாரிசு திரைப்படம் குறித்து அவர் மேலும் பதிவிட்டிருப்பதாவது, விஜய்மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரின் காம்பினேஷனும் செம்ம ஹாட்டாக உள்ளது. முதல் பாதியிலும் இரண்டாவது இடைவெளி பகுதிகளிலும் 15 நிமிடதிரைப்படத்தை ட்ரிம் செய்திருக்கலாம். கிளைமாக்ஸ் எபிசோட் அற்புதமாகஉள்ளது. விஜய் என்ட்ரி சீன் முழுவதும் கிளாப்ஸ்தான். வெகுஜனங்களும்குடும்பங்களும் இந்த திரைப்படத்தை விரும்புவார்கள். விஜய் இஸ் பேக் என குறிப்பிட்டு வாரிசு திரைப்படத்திற்கு 5க்கு 3.5 ரேட்டிங் கொடுத்துள்ளார் ஓவர்சீஸ்சென்சார் போர்டின் உறுப்பினரான உமர் சந்த்.

விஜய்
விஜய்

எல்லாவற்றையும் நன்றாகக் காட்டியிருக்கிறார்கள். தந்தை - மகன் உறவு, தாய் - மகன் உறவு ஆகியவற்றை அழகாக காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு படத்திற்கு காட்சி விருந்து அளித்துள்ளது. படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வசனங்கள்உள்ளன. ராக்கிங் இசை மற்றும் துணை நடிகர்களின் கண்ணியமான நடிப்பு.. என அனைத்தையும் பாராட்டியுள்ளார் இந்த சென்சார்போர்டு அதிகாரி. இது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com