வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட வேண்டுமா ? அப்ப கட்டாயம் இதை படிங்க!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட வேண்டுமா ? அப்ப கட்டாயம்  இதை படிங்க!

நடப்பாண்டு 2023ன் வாக்காளர் பட்டியல் இன்று 31.05.2023 வெளியிடப்பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/
என்ற வலைதளத்திலும் காணலாம்.

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக 1,23,064 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

இத்தொகுதியில் மொத்தம் 6,51,077 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்கள் 3,26,253; பெண்கள் 3,24,713; மூன்றாம் பாலினத்தவர் 111.

ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

01.04.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனவரி 1-இல் மட்டுமல்லாது, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும் நாட்களில் இளைஞர்கள் விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது.

மொத்தமாக 51,295 வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர்.

9,11,820 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.

மேலும், 2,60,103 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,01,18,904

பெண் வாக்காளர்கள் 3,11,09,813 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,34,583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டு உள்ளார்கள்.

மேலும், 18-19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 8,80,612. வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. இந்த இணையதள முகவரியில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரி பார்த்துக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com