தீபாவளியன்று தமிழ்நாட்டில் மழை பெய்யுமா..? தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்..!

Deepavali Festival
Deepavali Festival
Published on

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று மழை இருக்குமா? என்ற கேள்வி, மக்கள் மத்தியிலும், தீபாவளி பண்டிகை வியாபாரத்தை நம்பி இருக்கும் வியாபாரிகளுக்கும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையன்று மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி,தமிழகத்தில் வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் 20- ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழக கடற்கரைப் பகுதிகளில் கடல் காற்று காரணமாக ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, அக்டோபர் 17 - ஆம் தேதி முதல் 21- ஆம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர மாநிலப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குண்டை தூக்கி போட்டுள்ளார் பிரதீப் ஜான்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு பிடிக்காத நபரை இப்படி கூட பழி தீர்த்துக் கொள்ளலாம்!
Deepavali Festival

கடந்த 2011- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் மழை பெய்யும் என்று அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கடந்த 20 ஆண்டுகளில் தீபாவளி தினத்தன்று மழை பெய்ததா இல்லையா என்ற விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.

2025, October 20 - Possible heavy Rains

2024, October 31 - No Rains

2023, November 12 - No Rains

2022, October 24 - No Rains

2021, November 4 - No Rains

2020, November 14 - No Rains

2019, October 27 - No Rains

2018, November 6 - No Rains

2017, October 18 - No Rains

2016, October 29 - No Rains

2015, November 10 - No Rains

2014, October 22 - No Rains

2013, November 2 - No Rains

2012, November 13 - No Rains

2011, October 26 - Heavy Rains

2010, November 5 - No Rains

2009, October 17 - No Rains

2008, October 27 - No Rains

2007, November 8 - No Rains

2006, October 21 - No Rains

2005, November 1 - No Rains

2004, November 11 - No Rains

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com